நடிகர் குமரிமுத்து என்றாலே அவருடைய குபீர் சிரிப்புதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அத்தகைய அபாரமான நடிப்பு திறமை கொண்ட கலைஞரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் அவர் நடித்தாலும் அவருக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்தது ‘இது நம்ம ஆளு’ உள்ளிட்ட ஒரு சில படங்கள்தான். மற்ற படங்களில் எல்லாம் அவர் சின்ன கேரக்டரில் பத்தோடு பதினொன்றாக வரும் கேரக்டரில் தான் நடித்தார்.
40 வருடங்களுக்கு முன்பே திகில் படம் எடுத்த மணிவண்ணன்.. 200 நாள் ஓடிய வெற்றிப்படம்..!
நடிகர் குமரிமுத்து கேரளாவை சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவருக்கு நடிப்பு, நாடகம் ஆகிவற்றில் ஆசை இருந்தது. பராசக்தி திரைப்படத்தில் பூசாரியாக நடித்த நம்பிராஜன் என்ற நடிகர் குமரிமுத்துவின் உடன்பிறந்த சகோதரராவார்.
தனது சகோதரர் சென்னையில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் தனது சொந்த ஊரில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குமரிமுத்து சென்னைக்கு வந்தார். சகோதரர் உதவியால் நாடகங்களில் சில கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அப்போதுதான் அவருக்கு மகேந்திரன் உடன் பழக்கம் ஏற்பட்டது.
அவரது இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவரது இயக்கத்தில் உருவான ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதெ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்தார்.
மேலும், கோழி கூவுது, நானே ராஜா நானே மந்திரி, ஊமை விழிகள், அறுவடை நாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும் அவருக்கு சின்ன சின்ன கேரக்டர் தான் கொடுக்கப்பட்டது. பத்தோடு பதினொன்றாக இருக்கும் கேரக்டர்தான் என்பதால் அவர் ஆதங்கம் அடைந்தார்.
படம் வெற்றி பெற்றும் இயக்குனருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.. நொந்து போன பாலகுமாரன்..!
இந்த நிலையில்தான் திருப்புமுனையாக பாக்யராஜ் நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். பாக்யராஜின் தந்தையாகவும், மனோரமா கணவராகவும் நடித்த அவர் முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருப்பார். அவரது காமெடி மற்றும் சீரியசான நடிப்பு ரசிகர்களை கைதட்ட வைத்தது.
மார்க்கெட் இல்லாத பல நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு திரை வாழ்க்கை கொடுத்தது பாக்யராஜ்தான். ஜெய் கணேஷ், கல்யாண குமார், ஷோபனா, தீபா, கே.கே.சௌந்தர் உள்ளிட்ட நடிகர்களின் பட்டியலில் குமரிமுத்துவும் சேர்ந்தார்.
நடிப்பின் மீது நாட்டம் கொண்ட குமரிமுத்து திமுகவில் சேர்ந்தார். கலைஞர் கருணாநிதியின் மிகப்பெரிய அனுதாபியாக இருந்த அவர் திமுக தலைமை கழக பேச்சாளராகவும் இருந்தார். தனது மேடை பேச்சில் கூட அவர் தனது டிரேட் மார்க் குபீர் சிரிப்பை பயன்படுத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த அவர் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது என்று தைரியமாக குரல் கொடுத்தார். அதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி உடல் குறைவால் காலமானார்.
எழுநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குமரிமுத்து ஒரு அற்புதமான கலைஞர். தமிழ் சினிமா இன்னும் அவரை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். பலவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய எதார்த்தமான நடிகர் தான் குமரிமுத்து என்று அவரது மறைவு தினத்தில் இயக்குனர் மகேந்திரன் பேட்டி அளித்திருந்தார். அது ஒரு சத்தியமான வார்த்தை.
‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?
தமிழ் சினிமா இந்த மாபெரும் கலைஞனை சரியாக பயன்படுத்தாவிட்டாலும் இன்றும் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் இருக்கும்.