‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’.. 500 படங்கள் நடித்த ‘முதல் மரியாதை’ நடிகரை ஞாபகம் இருக்கின்றதா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘முதல் மரியாதை’ என்ற திரைப்படத்தில் ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏ.கே.வீராசாமி என்ற நடிகர்.

இவர் கடந்த 1963ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தாலும் ‘முதல் மரியாதை’ படத்தில்தான் இவர் அடையாளம் காணப்பட்டார். அந்த படம் இவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பின்னணியை அறிந்த ஒரே நபராக ஏ.கே.வீராசாமி இருப்பார். தனது மகளை சிவாஜியின் மருமகன் கொன்று விட்டான் என்ற குற்றச்சாட்டை கூறுவதற்காகதான் அவர் அவ்வப்போது ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என சிவாஜி முன் வசனம் பேசுவார்.

ak veerasamy1

முதலில் அதை புரிந்து கொள்ளாத சிவாஜி அதன் பிறகு தனது மருமகன்தான் அவருடைய மகளின் மரணத்திற்கு காரணம் என்று அறிந்தவுடன் அவரை காவல்துறையில் பிடித்துக் கொடுப்பார். இந்த படத்தில் சிறிய வேடம் என்றாலும் வீராசாமி மிக அருமையாக நடித்திருப்பார். செருப்பு தைக்கும் தொழிலாளியாக அவர் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்து இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகர் ஏ.கே.வீராசாமி கடந்த 1959ஆம் ஆண்டு ‘நாலு வேலி நிலம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் கற்பகம், பொம்மை, சித்தி, செல்வம், பூவும் பொட்டும், வா ராஜா வா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘தண்ணீர் தண்ணீர்’, சிவாஜி கணேசன் நடித்த ‘சங்கிலி’, ‘முதல் மரியாதை’, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ உள்ளிட்ட பல படங்களில் வீராச்சாமி நடித்துள்ளார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் கட்டிப்புடி வைத்தியத்தை இவரை வைத்துதான் கமல்ஹாசன் செயல்படுத்துவார். அந்த படத்தில் அவர் மருத்துவமனை தூய்மை பணியாளராக நடித்திருப்பார். இந்த படம்தான் அவர் நடித்த கடைசி படம் என்றாலும் அவர் நடித்த வல்லமை தாராயோ என்ற படம் மிகவும் தாமதமாக வெளியானது.

ak veerasamy

நடிகர் வீராசாமி, ராஜலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு. நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக வந்தவர்களில் ஒருவர்தான் வீராசாமி.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

தஞ்சையை சொந்த ஊராக கொண்ட வீராசாமி சென்னை வந்து திரைப்படங்களில் நடித்தார். அவர் காலத்தால் அழியாத பல காவிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வசனம் சினிமா உள்ளவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...