படம் வெற்றி பெற்றும் இயக்குனருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.. நொந்து போன பாலகுமாரன்..!

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும் பாலகுமாரனுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும் புகழ் முழுவதுமே பாக்யராஜுக்கு கிடைத்ததாகவும் கூறப்படுவது உண்டு. அந்த படம்தான் ‘இது நம்ம ஆளு’.

பாலகுமாரன் தமிழ் எழுத்துலகில் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுத தொடங்கிய அவர் பின்னாளில் பல நாவல்களை எழுதி உள்ளார். பாலகுமாரனுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு.

ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் சூப்பர் ஹிட்டான பாக்யராஜ் படம்!

என்பது, தொண்ணூறுகளின் காலகட்டத்தில் பாலகுமாரன், சுஜாதா நாவல்களை படிக்காத இளைஞர்கள் இருப்பது குறைவு. ஒரு புத்தகத்தில் நாவலின் டைட்டில் பெரிய எழுத்தாகவும் எழுதியவர் பெயர் சிறிய எழுத்தாகவும் இருந்த நிலையில், முதல் முறையாக சுஜாதா மற்றும் பாலகுமாரன் ஆகிய இருவருக்குத்தான் எழுத்தாளர்களின் பெயர் பெரிய எழுத்தாகவும் அவர்கள் எழுதிய நாவலின் டைட்டில் சிறிய எழுத்தாகவும் வந்தது. அந்த அளவுக்கு இருவருமே எழுத்துலகில் ஆளுமையாக இருந்தனர்.

balakumaran3

இந்த நிலையில்தான் சுஜாதா, சினிமாவில் புகழ் பெற்ற நிலையில் பாலகுமாரனும் சினிமாவில் களமிறங்க எண்ணினார். முதலில் அவர் சில படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் வசனம் எழுதிய முதல் படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை’ என்ற வசனம் இன்றளவும் பிரபலம்.

அதன்பின்னர் குணா, ஜென்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு அவர் வசனம் எழுதினார். திரையரங்குகளில் வசனம் பாலகுமாரன் என்ற டைட்டில் வரும்போது கைதட்டல் பெற்ற ஒரே எழுத்தாளர் பாலகுமாரன்தான்.

இந்த நிலையில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை பாலகுமாரனுக்கு இருந்தது. அப்போது பாக்யராஜுடன் அவர் நெருங்கி பழகிய நிலையில் அவருக்கு ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அந்த படத்தில் கதை, திறக்கதை, வசனம், இசை ஆகியவற்றை பாக்யராஜ் கவனித்துக்கொள்ள டைரக்சன் பொறுப்பு மட்டும் பாலகுமாரனிடம் கொடுக்கப்பட்டது.

balakumarn2

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பாக்யராஜுக்கும் பாலகுமாரனுக்கு மோதல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து சில காட்சிகளை பாக்யராஜே இயக்கியதாகவும் கூறப்படுவதுண்டு. அதனால் தான் டைட்டிலில் கூட டைரக்சன் மேற்பார்வை என்று பாக்யராஜ் பெயர் போடப்பட்டிருக்கும்.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் கடந்த 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் இந்த படத்தில் சில சர்ச்சை எழுந்தது. குறிப்பாக பிராமணர்கள் சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்டதால் இந்த படத்தில் பிராமணரான பாலகுமாரனை பாக்யராஜ் பயன்படுத்தி கொண்டார் என்றும் பாலகுமாரன் பெயரை டைட்டிலில் போட்டுவிட்டு பாக்யராஜ் தப்பித்துக் கொண்டதாகவும் விமர்சனம் வந்தது. இதனால் பாலகுமாரன் மிகவும் நொந்து கொண்டார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும் இது பாலகுமாரன் படம் என்று யாருமே சொல்லவில்லை. பாக்யராஜ் படம் என்றுதான் அனைவரும் கொண்டாடினர். இதனால் இனிமேல் எந்த படத்தையும் இயக்க மாட்டேன் என்று முடிவு செய்தார். இந்த படத்தில் இயக்குனர் பொறுப்பேற்கும்போது பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த பார்த்திபன் அவரை எச்சரித்தாராம். பாக்யராஜூடன் சேராதீர்கள், உங்களுக்கு எந்த புகழும் கிடைக்காது, மொத்த புகழையும் அவர் அள்ளிக் கொண்டு செல்வார் என்று விளையாட்டாக சொன்னதாகவும் அதை பாலாகுமாரன் பின்னாளில் உணர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

balakumaran1

பாலகுமாரன் எழுதிய பல வசனங்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக ‘ஜென்டில்மேன்’ படத்தில் ‘போற வழி தப்பா இருக்கலாம், ஆனால் போய் சேர்ற இடம் கோவிலா இருக்கணும், சத்ரியனா இருக்கிறதை விட சாணக்கியனா இரு’ என்ற வசனம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

இந்த நிலையில் எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 2018ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காலமானார். அவர் காலமாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் அவர் தனது இறப்பு குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...