இன்னைக்கு 250 கோடி வாங்கும் ரஜினி அப்போ வாங்கின சம்பளத்தைப் பாருங்க… அட ஏணி வச்சாக்கூட எட்டாதே..!

Published:

Rajinikanth: இன்று கதாநாயகர்களோட சம்பளம் 100 கோடியைத் தாண்டி இருக்கு. அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி மூன்று முடிச்சு படத்தில் நடிகர்கள் என்னென்ன சம்பளம் வாங்கினாங்கன்னு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். அது என்னன்னு பார்க்கலாமா…

மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகனாக நடித்த கமல் 30 ஆயிரம் சம்பளமும், ஸ்ரீதேவிக்கு 5000 சம்பளமும், ரஜினிக்கு 2000 சம்பளமும் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார் ஸ்ரீதேவி.

அப்போது ரஜினி ஸ்ரீதேவி அம்மாவிடம் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தாராம். அப்போது அவர் ஸ்ரீதேவி அம்மாவிடம் ஒருமுறை என்னைக்கு நான் கமல் ஹீரோ ஆவது? 30000 சம்பளம் வாங்குவது?

அப்படி எல்லாம் ஹீரோவாக முடியுமா என சலிப்புடன் கேட்டாராம். அதற்கு நீங்க நிச்சயமாக அந்த மாதிரி ஹீரோவாக வருவீங்க. சம்பளமும் வாங்குவீங்கன்னு அவருக்கு நம்பிக்கையை ஊட்டினாராம் ஸ்ரீதேவி அம்மா.ஸ்ரீதேவி அம்மா

அதே நிகழ்ச்சியில் ரஜினியை வைத்து இன்னொரு விஷயமும் ஸ்ரீதேவி குறிப்பிட்டு இருந்தார்.

moondru mudichu
moondru mudichu

அந்தப் படப்பிடிப்பின் போது அடிக்கடி ரஜினி செட்டை விட்டுக் காணாமல் போய்விடுவாராம். அப்போது பாலசந்தரிடம் போய் கேட்கும்போது இங்கே எங்காவது கண்ணாடி இருக்கான்னு பாரு. அது முன்னாடி தான் நின்னுக்கிட்டு இருப்பான்னு சொல்வாராம் பாலசந்தர்.

தன்னோட சிஷ்யனைப் பற்றி எந்தளவு துல்லியமாக எடை போட்டு வைத்துள்ளார் பாலசந்தர். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1976ல் பாலசந்தர் இயக்கத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்த படம் மூன்று முடிச்சு. கே.விஸ்வநாத் கதை எழுத, இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட். ஆடிவெள்ளி, நானொரு கதாநாயகி, வசந்த கால நதிகளிலே ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட். இந்தப் படத்தில் ரஜினி வில்லனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

த.செ.ஞானவேல் இயக்கி வரும் படம் வேட்டையன். பான் இண்டியன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 கோடியாம். ஜெயிலர் படத்துக்காக 150 கோடி வாங்கினாராம். சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆனால் அப்போது அவர் வாங்கிய சம்பளம் வெறும் 2000. இப்போது 250 கோடி என்றால் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏணி வச்சாக்கூட எட்டாதே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. படத்திற்காக வெளியிடப்பட்ட டை;டில் இன்ட்ரோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் அக்டோபர் 10ல் ரசிகர்களுக்கு திரை விருந்தாக வருகிறது.

மேலும் உங்களுக்காக...