திரை உலகம் என்பது ஒரு வித்தியாசமான துறை, எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், நடிகையாக இருந்தாலும், தயாரிப்பாளராக இருந்தாலும், இயக்குனராக இருந்தாலும் தங்களுடைய வாரிசுகளை பிரபலமாக்க முடியாமல் திணறி வருவார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா பல புது முகங்களை அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலம் ஆக்கி உள்ளார். ஆனால் அவரால் தனது சொந்த மகன் மனோஜ் பாரதிராஜாவை ஒரு நல்ல நடிகராக்க முடியவில்லை.
விஜய் படத்தில் நடிக்கும்போது ஒளிப்பதிவாளருடன் காதல்.. நடிகை சங்கீதாவின் காதல் கதை..!
கே பாக்யராஜ் இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். ஆனால் அவரது மகன் சாந்தனுவுக்கு இன்னும் ஒரு வெற்றிப் படம் கூட கிடைக்கவில்லை.

அதேபோல் தான் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் விஜய் உள்பட பல நடிகர்களுக்கு பல வெற்றி படங்களை கொடுத்து பிரபலமாக்கி உள்ளார். ஆனால் அவர் தனது சொந்த மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரையும் பெரிய நடிகராக்க முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ’புது வசந்தம்’ என்ற படத்தை தான் தமிழில் முதல் முதலில் தயாரித்தது. அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிய பிறகு ’சேரன் பாண்டியன்’, ’ஊர் மரியாதை’, ’கோகுலம்’ உட்பட பல திரைப்படங்களை தயாரித்தது.
நடித்தது 700 படங்கள்.. பாதிக்கு மேல் ஒரு பாடல் நடனம்.. நடிகை அனுராதாவின் அறியப்படாத தகவல்..!
விஜய்யை வைத்து முதன்முதலாக ’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தை தயாரித்த நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அந்த படத்தில் இருந்து தான் கிடைத்தது.
அதன் பின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’லவ் டுடே’, ’துள்ளாத மனமும் துள்ளும்’, ’ஷாஜகான்’, ’திருப்பாச்சி’, ’ஜில்லா’ ஆகிய படங்களை தயாரித்தது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

ஆனால் அதே நேரத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளத்ரி தனது மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரையும் வெற்றிகரமான ஹீரோவாக மாற்ற முடியவில்லை. ஜீவா நடித்த ‘ஆசை ஆசையாய்’ என்ற திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம் தயாரித்தது. இந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் அதன் பிறகு ஜீவா நடித்த பல படங்கள் தோல்வி அடைந்ததால் அவரது தந்தையே அவரை வைத்து படம் எடுக்க யோசித்ததாக கூறப்பட்டது.
குறிப்பாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ’ரௌத்திரம்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் அதன் பிறகு ஜீவாவை வைத்து படம் தயாரிக்க ஆர்பி சௌத்ரி முன் வரவில்லை என்று கூறப்பட்டது.
அதேபோல் தான் ஜித்தன் ரமேஷ் நடித்த ’ஜித்தன்’ என்ற திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படமும் அவருக்கு வெற்றிகரமான படமாக அமையவில்லை. ஏற்கனவே ஆர்பி சௌத்ரி ஜித்தன் ரமேஷை வைத்து படம் எடுக்க அவர் முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.
அஜித்துடன் அறிமுகம், விஜய்யுடன் 4 ஹிட் படங்கள்.. ஒரே ஒரு விபத்தில் காணாமல் போன நடிகை..!
தமிழ் திரையுலகில் பல வெற்றி இயக்குனர்களையும், நடிகர்களையும் உருவாக்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது சொந்த மகன்களை ஒரு மாஸ் ஹீரோவாக்க முடியாதது ஒரு மிகப்பெரிய துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
