விஜய் படத்தில் நடிக்கும்போது ஒளிப்பதிவாளருடன் காதல்.. நடிகை சங்கீதாவின் காதல் கதை..!

நடிகை சங்கீதா விஜய்யுடன் ’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவர் காதலை ஏற்று அவரையே கரம் பிடித்து இன்று வரை ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

நடிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் ’என் ரத்தத்தின் ரத்தமே’ ’இதய வாசல்’ போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

நடித்தது 700 படங்கள்.. பாதிக்கு மேல் ஒரு பாடல் நடனம்.. நடிகை அனுராதாவின் அறியப்படாத தகவல்..!

sanitha1

அவர் நாயகியாக நடித்த முதல் படம் ராஜ்கிரண் நடித்த ’எல்லாமே என் ராசாதான்’ என்ற படம் தான். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற பிறகு அவருக்கு ’பூவே உனக்காக’ படத்தில் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தான் சங்கீதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதுதான் சங்கீதாவும், அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரும் நெருக்கமாக பழகினர். முதலில் நட்பாக பழகினாலும் இந்த படத்துக்கு பிறகு ஒரு வருடம் அவர்கள் சந்திக்கவே இல்லை.

அதன் பின்னர் ’ஆஹா’ என்ற படத்தில் படப்பிடிப்பில் சரவணன் இருக்கும்போது அதே ஸ்டூடியோவில் வேறொரு தளத்தில் நடித்துக் கொண்டிருந்த சங்கீதாவை பார்த்தார். அதன் பின் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி காதலித்தனர். பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரே நடிகருக்கு அம்மா-மகள் ஜோடி.. ஒரே நடிகருக்கு அம்மா-மகளாக நடித்த நடிகைகள்..!

sanitha2

சங்கீதா கடந்த 2000 ஆண்டு சரவணனை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். அவருக்கு சாய் தேஜஸ்வதி என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் சரவணன், சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய போது சங்கீதா, தனது கணவருக்கு உதவி இயக்குனராக இருந்தார்.

புன்னகை நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர், சகோதரர்.. மரணப்படுக்கையில் கூட துரோகம்..!

திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 14 வருடம் கழித்து ஒரே ஒரு மலையாள திரைப்படத்தில் மட்டும் சங்கீதா நடித்தார். அதன் பின்னர் ஒரு சில வாய்ப்பு வந்தபோதிலும் அவர் நடிக்கவில்லை. தனக்கென்று ஒரு குடும்பம், குழந்தை என்று வந்துவிட்டதால் இனி நடிப்பில் என்னால் கவனம் செலுத்த முடியாது என்று பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...