படக் காட்சிக்காக உண்மையிலேயே பிளாட்பாரத்தில் படுத்து நடித்த அஞ்சலி… இவ்வளவு கொடுமை அனுபவித்தாரா?

Published:

தமிழ் சினிமாவில் கிளாமரை மட்டும் நம்பாமல் நடிப்பையும் நம்பி தனது திறமையின் மூலம் பிரபலமான ஒரு சில நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. ஆனால் அவர் வேறு எந்த நடிகையும் அனுபவிக்காத துன்பத்தையும் சோகத்தையும் அனுபவித்ததுதான் மிகக் கொடுமையான விஷயம்.

ஆந்திராவை சேர்ந்த நடிகை அஞ்சலி தனது சித்தியுடன் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்தார். அவர் வடபழனியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ என்ற படத்திற்காக நாயகி தேர்வு செய்யப்பட்டார்.

படக் காட்சிக்காக உண்மையிலேயே பிளாட்பாரத்தில் படுத்து நடித்த அஞ்சலி… இவ்வளவு கொடுமை அனுபவித்தாரா?

இதனை அடுத்து அவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் ’அங்காடி தெரு’ படம் தான். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் கொடுமையை அப்படியே தோலுரித்து காட்டும் வகையில் அமைந்தது என்பதும் அஞ்சலி அந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

anjali 2

குறிப்பாக இந்த படத்தில் பிளாட்பாரத்தில் படுக்கும் ஒரு காட்சியில் உண்மையாகவே பிளாட்பாரத்தில் தங்கி இருந்தவர்களுடன் அஞ்சலியை படப்பிடிப்பிற்காக வசந்த பாலன் படுக்க வைத்தார். முதலில் அஞ்சலி முடியாது என்று கூறினாலும் அதன் பிறகு இந்த காட்சி கதைக்கு முக்கியமானது என்று விளக்கத்துடன் கூறிய பிறகு அவர் ஒரு கட்டத்தில் நடிக்க சம்மதித்தார். அந்த காட்சியில் அவர் உண்மையாகவே பிளாட்பாரத்தில் படுத்து இருந்த மக்களுடன் சேர்ந்து படுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அங்காடித்தெரு’ பட வெற்றியை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் ஓரளவு குவிய தொடங்கியது. அதன் பிறகு ’எங்கேயும் எப்போதும்’ என்ற படம் தான் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்ததாக அமைந்தது. அந்த படத்தில் ஜெய் ஜோடியாக அவர் நடித்திருந்த நிலையில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அதன் பிறகு இருவரும் காதலித்ததாகவும் கூறப்பட்டது. சில வருடங்களுக்கு பின் மீண்டும் இருவருக்கும் பிரேக்கப் ஆகியதாகவும் செய்திகள் வெளியானது.

விஜய் படத்தில் நடிக்கும்போது ஒளிப்பதிவாளருடன் காதல்.. நடிகை சங்கீதாவின் காதல் கதை..!

இந்த நிலைதான் அஞ்சலியின் வருமானம் எல்லாத்தையுமே அவரது சித்தி பறித்து கொண்டதாகவும் சித்தி பல கொடுமைகள் செய்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அஞ்சலியை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

anjali 1

இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் தனக்கு சினிமாவே வேண்டாம் என்று வெறுத்துப்போன அஞ்சலி ஆந்திராவுக்கு மீண்டும் திரும்பி சென்று விட்டார். அங்கு ஒரு தயாரிப்பாளர் இடம் தனது சோக கதையை கூறிய பிறகு உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்று கூறி அஞ்சலிக்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு கொடுத்தார். அதன் பிறகு அஞ்சலிக்கு தொந்தரவு கொடுத்த யாருமே அவருடைய பக்கத்திலேயே நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த தயாரிப்பாளரின் ஆதரவு காரணமாக தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்த அஞ்சலி தமிழ் படமே வேண்டாம் என்று இருந்தார். ஆனால் அஞ்சலியை மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ராம் தான். அவர் தனது ’பேரன்பு’ என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார். அதேபோல் ’தரமணி’ படத்தில் அஞ்சலி ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

நடித்தது 700 படங்கள்.. பாதிக்கு மேல் ஒரு பாடல் நடனம்.. நடிகை அனுராதாவின் அறியப்படாத தகவல்..!

இந்த நிலையில் தற்போது மீண்டும் ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படத்தில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். அஞ்சலி தற்போது சித்தி உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனது சுய கட்டுப்பாடுடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...