பிக் பாஸ் 8: பளார்னு சாஸ் பாட்டில் எடுத்து ஒரு அடி.. அவ்ளோ உண்மையா காதலிச்சேன்.. வேதனையை பகிர்ந்த சவுந்தர்யா..

Soundariya Love Story Bigg Boss 8: சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து அவர்களின் காதல் கதைகளை சொல்லி வந்ததும் அதில் சவுந்தர்யா தனது காதல் கதையை சொன்ன போது…

soundariya love story bigg boss

Soundariya Love Story Bigg Boss 8: சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து அவர்களின் காதல் கதைகளை சொல்லி வந்ததும் அதில் சவுந்தர்யா தனது காதல் கதையை சொன்ன போது ஒருவித அதிர்ச்சி ஏற்பட்டிருந்ததும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மாடலாகவும் சில படங்களில் முகம் காட்டியும் பிரபலமாகி வந்த சவுந்தர்யா நஞ்சுண்டனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

இதில் நுழைவதற்காக சுமார் 8 ஆண்டுகள் அவர் முயற்சி செய்து வருவதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில் அவரது குரலும் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது. பெண்களின் குரலை போல இல்லாமல் ஆண்களின் குரல் போல கனமாக இருப்பதாக பலரும் தெரிவிக்க, இதனை விஜய் சேதுபதியும் மிக பாசிட்டிவாக எதிர் கொண்டு அவரைத் தேற்றி அனுப்பி இருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பலரும் சவுந்தர்யாவின் குரலை கேலி பேசி தான் வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தனது காதல் கதையை சவுந்தர்யா சொல்லி முடித்ததும் அங்கிருந்து பலருக்குமே கூட கோபம் வந்து விட்டது. அந்த அளவுக்கு சவுந்தர்யாவின் முன்னாள் காதலன் இருந்தது தான் தற்போது இணையத்திலும் விவாதமாக மாறி உள்ளது. இது பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனம்திறந்து பேசும் சவுந்தர்யா, “11 வது படிக்கிறதுல இருந்து காலேஜ் வரைக்கும் நானும் அவரும் லவ் பண்ணோம். என்னோட லவ் ரொம்ப உண்மையா இருந்துச்சு.

நான் கல்லூரி படிக்கும் போது பேஷன் டிசைனிங் படிச்சுட்டு இருந்தேன். கூடவே மாடலிங்கும் பண்ணிட்டு இருந்தேன். இது எனது முன்னாள் காதலனுக்கு பிடிக்காது. இதனால் நான் போட்டோ ஷூட் செய்யும் புகைப்படங்களை தனியாக போனில் மறைத்து வைத்திருந்தேன். அதனை அவர் ஒரு நாள் எனது செல்போனில் பார்த்து விட ரோட்டில் அனைவரின் முன்னிலையிலும் என்னை ஓங்கி அடித்து விட்டார். ஆனால் பின்னாளில் எனது கேரியருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதால் நாங்கள் பிரேக் அப் செய்துவிட்டோம்.

ரோட்டில் மட்டும் இல்லாமல் எனது நண்பர்களுடன் இருக்கும் போது கூட சாஸ் பாட்டில் எடுத்து என் தலையில் அடித்துள்ளார். பள்ளியிலிருந்து காதலித்ததால் நான் மிகவும் உண்மையாக இருந்ததுடன் அவர் என்ன செய்தாலும் அதனை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போனேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எனது லட்சியம் அவருக்கு பிடிக்காததால் பிரேக் அப் செய்யும் நிலை உருவானது” என சவுந்தர்யா கூறினார்.

சவுந்தர்யா இதை சொல்லி முடித்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைய இதுவும் ஒருவகை ‘Women Abuse’ என முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். வெளியே இருந்து பிரபலங்களை பார்க்கும்போது அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தோன்றினாலும் இப்படியும் பல கசப்பான அனுபவங்கள் நிறைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.