சென்னை அருகே, ரோட்டுக்கடையில் நடிகர் சோனு சூட் தோசை சுட்டு, அந்த தோசையை அவரும் சாப்பிட்டு, தன்னுடன் வந்தவர்களுக்கும் கொடுத்தார். மேலும், கடைக்காரர் கேட்ட பணத்தை விட இருமடங்கு பணம் கொடுத்து, இன்ப அதிர்ச்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக மட்டுமே இல்லாமல், மனிதநேயமிக்கவராகவும் கருதப்படுகிறார் சோனு சூட். கொரோனா காலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மக்களுக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை அருகே, ரோட்டோரம் உள்ள தோசைக்கடைக்கு அவர் திடீரென தனது நண்பர்களுடன் வருகை தந்தார். அவரை பார்த்து, அந்த கடையின் உரிமையாளர் சாந்தி ஆச்சரியமடைந்தார்.
இதன் பிறகு, கடை உரிமையாளரிடம் சோனு சூட், “நானே தோசை சுடுகிறேன்” என்று கூற, அவர் அதற்கு அனுமதி வழங்கினார். சோனு சூட் தோசை சுட, முதலில் அவருடைய நண்பர்கள் சாப்பிட்டனர், அதன் பிறகு அவரும் சாப்பிட்டார்.
பின்னர், தோசையின் விலை எவ்வளவு என்று கேட்டதற்கு, கடை உரிமையாளர் சாந்தி, “ஒரு தோசை 15 ரூபாய்” என்று கூறினார். ஆனால், சோனு சூட், தன்னுடைய நண்பர்களும் சாப்பிட்ட தோசைகளை கணக்கில் கொண்டு, ஒரு தோசைக்கு 30 ரூபாய் என்று கணித்து பணம் கொடுத்து விட்டு சென்றார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சோனு சூட் வந்து தோசை சுட்டு சாப்பிட்டதால், அந்த கடை ஒரே நாளில் அந்த பகுதியில் பிரபலமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/DGnJiOqg5Hk/