என்.ஒ.சி வாங்கி வந்தால் தான் நடிப்பேன் என கூறிய ஜெமினி.. படப்பிடிப்பு நேரத்தில் மனைவிக்கு பிரசவம்.. ஓடி வந்து உதவி செய்த சிவாஜி..!

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த நபர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று பி.ஆர்.பந்தலு முடிவு செய்தபின் அவரது முதல் தேர்வு சிவாஜி கணேசன்தான். சிவாஜி கணேசன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று கூறினாராம். சிவாஜி கணேசன் சந்தோசமாக ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் வெள்ளையத்தேவன். இந்த கேரக்டரில் நடிக்க முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென அவர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகு தான் இந்த கேரக்டரில் ஜெமினி கணேசன் நடிக்க வந்தார்.

veerapandia

ஜெமினி கணேசனிடம் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறிய போது, ஏற்கனவே எஸ்.எஸ்.ஆர் ஒப்பந்தமானது அவருக்கு தெரிந்திருந்தது. தனக்கும் எஸ்எஸ்ஆருக்கும் நல்ல நட்பு இருக்கிறது என்றும் எனவே நீங்கள் எஸ்எஸ்ஆரிடம் சென்று, ‘நான் இந்த படத்தில் சொந்த பணி காரணமாக நடிக்க முடியவில்லை, வேறு எந்த நடிகர் இந்த கேரக்டரில் நடித்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்று என்ஓசி எழுதி வாங்கிக்கொண்டு வாருங்கள், அதன் பிறகு நடிக்கிறேன் என்று கூறினார். அதன்படியே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்எஸ்ஆரிடம் சென்று என்ஓசி வாங்கி வந்து ஜெமினி கணேசனிடம் கொடுத்த பிறகுதான் அவர் இந்த படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய போர்க் காட்சி ராஜஸ்தானில் படமாக்கப்பட்டது. சிவாஜி கணேசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் ராஜஸ்தான் சென்றுவிட்டனர். அப்போது ஜெமினி கணேசன் மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் படக்குழுவினர் மிகவும் டென்ஷனாக இருந்தார்கள்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

ஜெமினியிடம் போன் போட்டு பேசியபோது சாவித்திரிக்கு தற்போது நிறைமாதம் என்றும் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்றும் அதனால் என்னால் வர முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது என்று கூறினார்.

veerapandia1 1

அப்போது சிவாஜி கணேசன் அவரை போனில் தொடர்பு கொண்டு, ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியிடம் மாறி மாறி பேசினார். சாவித்திரியை நல்லபடியாக கவனித்துக் கொள்வது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரசவம் பார்ப்பது அனைத்தையும் தன்னுடைய குடும்பத்தினர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள், எனவே நீங்கள் எந்தவிதமான பயமும் இன்றி நடிக்க வாருங்கள் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

சிவாஜி கொடுத்த அந்த உத்தரவாதத்தை அடுத்துதான் ஜெமினி கணேசன் படப்பிடிப்புக்கு கிளம்பினார். அதன்படி சிவாஜி குடும்பத்தினர் சாவித்திரியை சென்னை மயிலாப்பூரில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தை பிறக்கும் வரை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் 1959ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி தமிழகத்தில் ரிலீசானது. ஆனால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே லண்டனில் ரிலீஸானது. இந்த படம் மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. பத்திரிகைகள் இந்த படத்தை கொண்டாடின. முன்னணி பத்திரிகையான ஆனந்த விகடன், கல்கி சிவாஜியின் நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தது.

veerapandia2

இந்த படம் பெரும்பாலான திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த படம் சில ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழில் சிறந்த படம் என்ற தேசிய விருது இந்த படத்துக்கு கிடைத்தது. சிறந்த நடிகர் விருது ஆஃப்ரோ-ஆசியன் திரைப்பட விழாவில் சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது.

இந்த படத்தின் மெட்ராஸ் ரிலீஸ் உரிமையை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் பெற்று இருந்தது. அதனால் இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் கிடைத்தது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

மொத்தத்தில் ஒரு சரித்திர கதை அம்சம் கொண்ட காலத்தால் அழியாத காவிய திரைப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வெற்றியால் அந்த படத்தின் குழுவினர்களுக்கே பெருமை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...