சுச்சி லீக்ஸால் வாழ்க்கை சூனியம் ஆனது!.. சிவா மனசுல சக்தி பட ஹீரோயின் அனுயா அதிர்ச்சி பேட்டி!..

Published:

ஜீவா, சந்தானம் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் ஹீரோயினாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுயா பகவத். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக வெளியான மாஹேக் எனும் படத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர் ராஜேஷ். எம் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் இன்றளவும் நடிகர் ஜீவாவுக்கும் ஹீரோயின் அனுயாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரது நடிப்பும் அந்த படத்தில் சிறப்பாக அமைந்திருக்கும். சந்தானத்தின் காமெடி வேற லெவலில் கை கொடுத்திருக்கும்.

சிவா மனசுல சக்தி ஹீரோயின்:

அந்த படத்திற்கு பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம் என அனுயா தேர்வு செய்த படங்கள் எல்லாமே அவருக்கு தோல்வி படங்களாக அமைந்து விட்டனர். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஹீரோயின் இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார் அனுயா. அதன் பின்னர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான நான் படத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் சினிமாவில் இருந்து பல காலங்கள் காணாமல் போக காரணமே சுசி லீக்ஸ் தான்.

அனுயாவின் ஆபாச படம் என ஒரு வீடியோ வைரலான நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் மொத்தமாக அடிபட்டுவிட்டது. சமீபத்தில் அளித்த பெட்டியில், அந்த மார்பிங் வீடியோ வெளியான நிலையில். செய்துகொள்ள நினைத்ததாகவும், ஆனால் தனது குடும்பம் தன் மீது வைத்த நம்பிக்கை காரணமாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வருவதாக உருக்கமாக பேசியுள்ளார்.

சுச்சி லீக்ஸால் சூனியமாச்சு:

தான் யாரிடமும் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும் தனக்கு காதலர்கள் யாரும் இல்லை என்றும் இதுவரை திருமணம் கூட செய்து கொள்ளவில்லை என பேசியுள்ளார். மார்பிங் வீடியோக்கள் என் வாழ்க்கையை கெடுத்தாலும் நான் அதிலிருந்து மீண்டும் வந்து விட்டேன். ஆனால் இளம் நடிகைகள் பல இதுபோன்ற பிரச்சனைகளில் சந்தித்தால் அவர்கள் மீள்வது கடினம் என்றும் கூறியுள்ளார். சிவா மனசுல சக்தி படம் ரீ-ரிலீஸ் ஆனால் தன்னைக் கூப்பிடுவார்கள் என நம்புகிறேன் என்றும் அனுயா பகவத் அந்த பேட்டியில் ஓபனாக பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

ஒரு படத்தில் ஓஹோன்னு ஹிட் அடித்து விட்டு அடுத்தடுத்து ஆள் அட்ரஸே தெரியாமல் பல நடிகைகள் காணாமல் போயுள்ளனர். அந்த வரிசையில் அனுயாவும் காணாமல் போக காரணமே டீப் ஃபேக் ஆபாச படம் தான் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...