விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் மீனா தனது அம்மா வீட்டுக்கு செல்கிறார். அப்போது அம்மா மகள்கள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அம்மா கடைக்கு சென்றவுடன் சீதாவிடம், மீனா ’உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்,” என்று கூறுகிறார்.
அப்போது சந்தேகப்படும் சீதா, “என்ன விஷயம்?” என்று கேட்க, “நீ எப்போதும் வேலைக்கு போய்விட்டு பஸ்ஸில் தானே சென்று வருவாய்?” என்று கேட்க, “ஆமாம், சில சமயம் என்னுடைய தோழி வண்டியில் கூட்டிச் செல்வார்,” என்று சீதா கூற, “நீ வேண்டுமானாலும் ஒரு வண்டி வாங்கிக்கொள்,” என்று மீனா சொல்ல, அதற்கு சீதா, “இல்லை வேண்டாம், அதற்கு வேற தவணை கட்டணும் என்று கூறுகிறார்.
இந்த நிலையில், “இன்றைக்கு நீ பஸ்ஸில் தான் வந்தாயா? எந்த பஸ்ஸில் வந்தாய்? எந்த ஸ்டாப்பில் இறங்கினாய்?” என்று கேட்க, சீதா, “நீ கேட்பது எனக்கு புரிகிறது. என்னை ஒருத்தர் வண்டியில் இறக்கிவிட்டதை நீ பார்த்திருக்கிறாய், என்னை ஒருத்தர் காதலிப்பதாக சொன்னார். அவருடன் தான் வண்டியில் வந்தேன். ஆனால் நான் இன்னும் என் முடிவை சொல்லவில்லை,” என்று சீதா கூறினார்.
அதன்பின் மீனா, சீதாவை முறைப்பது போல் நடித்து அதன் பின் சந்தோஷத்துடன், “உனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பேசி முடித்துவிடுவோம்,” என்று சொல்லுகிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் சீதா, “இப்போதைக்கு வேண்டாம், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்,” என்று சொல்லி, “அதுவரை அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்,” என்று கூறுகிறார்.
“நீ எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சந்தோஷம் தான். அப்பா போன பிறகு அம்மா நம்ம மூன்று பேருக்காக தான் வாழ்கிறார். அவருடைய மனதை கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான்,” என்று சொல்ல, சீதாவும், “கண்டிப்பாக என்னுடைய முடிவும் நல்ல முடிவாக தான் இருக்கும்,” என்று சொல்கிறார்.
இந்த நிலையில், சீதாவை பார்த்ததாக முத்து மீனாவிடம் கூற, “அவளை வண்டியில் இறக்கி விட்டவரை பார்த்தீர்களா?” என்று கேட்க, அதற்கு “இல்லை,” என்று கூறியவுடன் மீனா நிம்மதி அடைகிறார்.
இந்த நிலையில் ரோகிணி வேலைக்கு போய்விட்டு திரும்பி வரும்போது, “இன்று எவ்வளவு சம்பாதித்தாய், அந்த காசை எனக்கு கொடு,” என்று விஜயா அதிகாரத்துடன் கேட்கிறார். அதன்பின் ஏ.டி.எம் கார்டையும் வாங்கி, அதன் பின்நம்பரையும் வாங்கிக் கொள்கிறார். அதிகார தோரணையுடன் விஜயா பேசியதை கண்டு, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இதை பார்த்த மீனாவும் முத்துவும், “இது ரொம்ப தப்பாச்சே,” என்று கூறுகிறார்கள்.
அதன் பிறகு மனோஜ் வந்தவுடன், “ரோகிணியை பார்த்தாயா? ரோகிணி கடைக்கு வந்தாளா?” என்று அதிகாரமாக விஜயா பேசுகிறார். “இனிமேல் ரோகிணியை வெளியே நீ எங்கேயாவது பார்த்தால், உன்னை நிரந்தரமாகவே பார்க்க விடாமல் செய்து விடுவேன்,” என்று மனோஜை விஜயா மிரட்டுகிறார்.
இதன் பிறகு அறைக்கு வந்தவுடன், ரோகிணி, மனோஜிடம் ஏ.டி.எம் கார்டை வாங்கி வைத்ததை சொல்லும்போது, “நீ சொன்ன பொய்கள், நீ செய்த பிராடுகளை எல்லாம் ஒப்பிடும்போது, இது ஒன்னும் பெருசு இல்லை. அம்மா எது செய்தாலும் ஒரு காரணத்துக்கு தான் செய்வார்கள்,” என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இந்த நிலையில் மொட்டை மாடியில், முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் இது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். “மனோஜை வரவழைத்து பேசலாம்,” என்று கூறுகிறார்கள். மனோஜ் வந்தவுடன், “அம்மா கார்டை வாங்கிய தவறு, இதை நீதான் தட்டி கேட்க வேண்டும்,” என்று முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோர் கூற, “அதெல்லாம் முடியாது, நான் சொன்னால் மட்டும் அம்மா கேட்டு விடுவார்களா,” என்று கூறுகிறார்.
மீனாவும் ஸ்ருதியும் கூட சில அறிவர்களை கூறியபோதும் மனோஜ், அடி முட்டாளாக, இது எதுவுமே புரியாமல் இருக்கிறார். ஆனால் அதன் பிறகு திடீரென, “எனக்கு புரிந்து விட்டது! எனக்கும் அம்மாவுக்கும் சண்டையை மூட்டி, நீங்கள் நாலு பேரும் ஒரு கூட்டணியாக இருக்கலாம் என்று தானே பிளான் போடுறீங்க?” என்று கேட்க, நால்வரும் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.
நாளைய எபிசோடு ப்ரோமோ வீடியோவில் மீனா தனது இரண்டு தோழிகளை வண்டியில் ஏற்றுக்கொண்டு வரும்போது, அருண் அவர்களை மறித்து 500 ரூபாய் அபராதம் போடுகிறார். மீனாவும் கோபத்துடன் அந்த காசை கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.