இந்தியா உண்மையிலேயே சூப்பர்.. ராணா நாடு கடத்தல் குறித்து அமெரிக்கா புகழாரம்..

  இந்திய அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு, தங்கள் நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை சட்டப்படி தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்காக…

rana

 

இந்திய அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு, தங்கள் நாட்டில் நடந்த ஒரு பயங்கரவாத செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரை சட்டப்படி தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்காக இந்திய அரசுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரை  டெல்லி  NIA அதிகாரிகள் கைது செய்து, பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை 20 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்கள் நாட்டில் 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளி என்ற சந்தேகப்படும் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டோம் என்றும், இந்த தாக்குதலில் அமெரிக்கர்களும் உயிரிழந்தனர் என்றும், இந்த தாக்குதலுக்கு காரணமானவரை இந்தியா சட்டப்போராட்டம் நடத்தி நீதியின் முன் நிறுத்தி இருப்பது உண்மையிலேயே ‘சூப்பர்’ என்றும், இந்தியாவுக்கு தனது வாழ்த்துக்கள் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை நீதிக்கு முன் கொண்டு வர இந்தியா நீண்ட காலம் முயற்சி எடுத்தது என்றும், அமெரிக்காவும் இந்தியாவின் அந்த முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியது என்றும், எங்கள் அதிபர் டிரம்ப் கூறியதுபோல், உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியா–அமெரிக்கா தொடர்ந்து ஒன்றாக செயல்படும் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து, நாடு முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.