நடிகர் சிங்கம் புலி மனைவி கார்கில்ல பணிபுரிஞ்சவங்களா.. சல்யூட் போட வைத்த பின்னணி..

Published:

தமிழ் சினிமாவில் சிலரை காமெடி நடிகராக நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் அவர்கள் வேறொரு துறையில் தான் மிக பிரபலமாக இருந்திருப்பார்கள். அந்த வகையில் பலரும் இவர் நடிகர் மட்டும் தான் என நம்பிக் கொண்டிருக்கும் ஒருவர்தான் சிங்கம் புலி. பல காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த சிங்கம் புலி, அஜித்தை வைத்து ரெட் என்ற திரைப்படத்தையும், சூர்யாவை வைத்து மாயாவி என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

இது தற்போது வரையிலும் பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கும் நிலையில் திரைப்படங்கள் இயக்கி வருவதுடன் மட்டுமல்லலாமல் பல திரைப்படங்களில் கதை மற்றும் திரைக்கதை எழுதியும் பிரபலம் அடைந்துள்ளார். இன்னொரு பக்கம் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக சிங்கம் புலி தோன்றியதால் இவர் நடிகர் என்று தான் பலரும் நினைக்கத் தொடங்கி விட்டனர்.

இப்படி நடிப்பு, எழுத்து, இயக்கம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கி வரும் சிங்கம் புலி சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருந்த மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு எந்த அளவுக்கு பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்ததோ அதே அளவுக்கு சிங்கம் புலியையும் உயரமான இடத்திற்கு கொண்டு சேர்த்திருந்தது.

இதற்குக் காரணம் காமெடியன் கதாபாத்திரத்தில் சிங்கம் புலியை நாம் கண்டு பழகி விட்டிருந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தில் அப்படியே எதிர் மாறாக ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அதுவும் அப்பாவி கதாபாத்திரத்தில் வரும் வில்லனை போல நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்.

இதுவரை காமெடி நடிகராகவே பார்த்த சிங்கம் புலியை இனி பல இயக்குனர்களும் வேறு கதாபாத்திரங்களில் யோசிக்க தொடங்கி விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படி ஒரு சூழலில் தம்பி ராமையாவின் மனைவி குறித்து அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்த தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தனது மனைவி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த தம்பி ராமையா, “எனது மனைவி கார்கில் போரில் இருந்தார். வீரர்கள் இருக்கும் Bunker-ல் ஒரு 60 நாள் வரை வேலை பார்த்திருக்கிறார். போர் முடிந்த பின்னர் பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் முன்னிலையில் உனக்கு என்ன வேண்டுமென்றும் மனைவியிடம் கேட்கின்றனர். அவர் நினைத்தால் நிலம், பெட்ரோல் பங்க் என எது வேண்டுமானால் கேட்டிருக்கலாம்.

ஆனால், தனது பெற்றோருடன் இருக்க வேண்டும் என்பதற்காக Port Blair போக வேண்டுமென கேட்டார். ஐந்து ஆண்டுகள் அங்கு தான் மருத்துவ சேவை செய்தார். இதன் பின்னர் நாங்கள் திரிபுரா, புனே, ராஞ்சி ஆகிய இடங்களுக்கு சென்றோம். இப்போது ஜபல்பூரில் இருக்கிறார். எனது மனைவி தற்போது கர்னலாக இருக்கிறார்” என பெருமையுடன் சிங்கம் புலி குறிப்பிட நிகழ்ச்சியில் இருந்த அனைவருமே சல்யூட் அடிக்க தொடங்கி விட்டனர்.

மேலும் உங்களுக்காக...