ச்சீ.. எதுக்கு இந்த நாரப்பொழப்பு.. பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய கஸ்தூரி..

Published:

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகி அறிமுகமாகி பின் பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன். பெயரிலேயே பயில்வான் என்று இருப்பதால் உடலையும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். மேலும் சினிமா பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அந்தச் சேனலில் சினிமா துறையைச் சார்ந்த பலரையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வழக்கம். குறிப்பாக சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார். இதனால் இவருக்கு எதிராக சினிமாத் துறையினர் பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

சூர்யா ஜோதிகா திருமணத்தை இதற்காக தான் தடுத்தேன்… அதுக்கப்பறம் ஒத்துக்கிட்டதுக்கு காரணம் இதுதான்… சிவகுமார் பகிர்வு…

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில், பிழைப்புக்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. ஆனால் அவர் மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களைப் பேசி அதில் வரும் பணத்தில் வாழ்கிறார். கள்ளச்சாராயம், போதைப் பொருள் என அனைத்திலும் நிறைய காசு வரும். ஆனால் அதெல்லாம் ஒரு பொழப்பா. ஒருத்தர் குடியைக் கெடுத்து வரும் வேலையைத் தான் பயில்வான் செய்து கொண்டிருக்கிறார். அவர் பூ வித்துப் பொழைக்கலாம். ஆனால் அவர் பீ வித்துப் பொழைக்கிறார்.

எத்தனையோ பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களின் அந்தரங்கத்தைப் பேசுவதே தவறு. ஆனால் பயில்வான் ரங்கநாதன் அதைப் பொதுவெளியில் பேசி சம்பாதித்து வருகிறார். அவர் சொல்வதில் ஒரு உண்மை இருக்கும். ஆனால் 99 பொய்கள் இருக்கும். மக்களும் இவர் சொல்வதை நம்புகிறார்கள். மேலும் அவர் சொல்லும் செய்திகளை நம்ப சில ஆட்கள் இருக்கிறார்கள். எனவே அந்தப் பீயை அவர் நன்றாக பேக் செய்து விற்கிறார். ச்சீ..ச்சீ இது மலம் என்று தவிர்த்துவிட்டால் யாரும் கேட்க மாட்டார்கள். எதற்கு இந்த நாரப் பொழப்பு?

அவர் தாய்மையை கொச்சைப்படுத்திப் பேசுகிறார். தாய்மையின் மகத்துவம் தெரியவில்லை. ஆனால் நான் அவர் தாயைப் பற்றிப் பேச மாட்டேன். அவரின் வளர்ப்பு சரியில்லை என பயில்வான் ரங்கநாதனை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...