தென்னரசின் திட்டத்தை உடைக்கும் சிக்கல் சிவபதி… தேனுவின் மகிழ்ச்சியான தருணம்… சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

By Meena

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் தென்னரசு குருஜியின் பெயரைச் சொல்லி அம்மாவையும் அப்பாவையும் சமாளித்து தேனுவின் கர்ப்பத்தை கலைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கோபத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறான். மறுபுறம் சக்தி, வேலு, தேனு ஆகியோர் குருஜி பெயரைக் கூறி தென்னரசு பிரச்சனை செய்தால் எப்படி சமாளிக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று இனி காணலாம். முதலில் குருஜியின் பெயரை வைத்து பிரச்சனை வந்தால் என்னால் சமாளிக்க முடியும் என்று கூறுகிறான். அதற்கு சக்தி எப்படி உன்னால் அதை செய்ய முடியும் என்று கேட்கிறாள். அதற்கு வேலு குருஜி ஒரு டுபாக்கூர் என்று கூறுகிறான். பின்னர் சக்தியிடம் இதற்குள் அண்ணன் தென்னரசு வீட்டிற்கு போய் அவனுக்கு தகுந்தாற்போல் அப்பாவிடம் பேசிவிடுவான். நாம் சீக்கிரம் வீட்டிற்கு போகலாம் என்று கூறி சக்தியையும் தேனுவையும் அழைத்துச் செல்கிறான்.

வீட்டில் பூந்தொட்டியெல்லாம் உடைத்துக் கொண்டு தென்னரசு வருகிறான். அதைப் பார்த்த ஜோதி ஏன் இப்படி கோவமா இருக்கனு கேட்கிறாள். கூடவே தேனுவை அழைத்துக் கொண்டு படம் பார்க்க தான போன, நீ மட்டும் வர தேனுவை எங்க என்று கேட்கிறாள். இவர்களின் சத்தத்தைக் கேட்டு சிக்கல் சிவபதி வந்துவிடுகிறார். ஜோதியிடம் ஏன் கத்துற என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது சக்தி, வேலு, தேனு ஆகியோரும் வந்துவிடுகின்றனர்.

ஜோதி தேனுவிடம் தென்னரசு கூடத்தானே போன இப்போ இவங்க கூட ஏன் வர்ற என்ன தான் பிரச்சனை என்று கேட்கிறாள். சக்தி, தென்னரசு மாமா தவறு செய்கிறார் என்று கூறுகிறாள். அதைக் கேட்ட சிக்கல் சிவபதி என்ன நடந்தது என்று கேட்கிறார். சக்தி தென்னரசு தேனுவின் கர்ப்பத்தை கலைக்க கூட்டி போனார் எனவும் நானும் வேலுவும் சரியான நேரத்தில் சென்று தேனு அக்காவை காப்பற்றினோம் என்று கூறுகிறாள்.

சிக்கல் சிவபதி கோபமாகி தென்னரசுவை அடிக்கிறார். நம் வீட்டு வாரிசை ஏன் கொல்ல பாக்கிற என்று கேட்கிறார். ஜோதியும் குழந்தை கிடைக்கிறது வரம் அதை ஏன்டா கொல்ல பாத்த என்று கேட்கிறாள். அதற்கு தென்னரசு தேனுவை எனக்கு பிடிக்கவில்லை அவள் மூலமாக எனக்கு வாரிசு வேண்டாம் என்று கூறுகிறான்.

அதற்கு சிக்கல் சிவபதி நீ என்ன சொன்னாலும் அது நம்ம வீட்டு வாரிசு அதை எதுவும் செய்யக் கூடாது என்று கூறுகிறார். தென்னரசு குருஜி இந்த குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று சொன்னார் என்று தனது திட்டத்தை செயல்படுத்துகிறான். சிக்கல் சிவபதி குழந்தை என்பது தெய்வம் அதை கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தென்னரசின் திட்டத்தை உடைத்து விடுகிறார். தேனுவிடம் நீ கவலைப்படாத நல்லபடியா இந்த வீட்டு வரிசை பெற்றுக் கொடு. நான் இருக்கிறேன் தென்னரசு இனி எதுவும் செய்ய முடியாது என்று கூறிச் செல்கிறார்.

தேனு அதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் திளைக்கிறாள். சக்திக்கும் நன்றி கூறுகிறாள். அடுத்ததாக தென்னரசு குடித்து விட்டு வந்து சக்தியிடம் என் அப்பாவை எனக்கு எதிராக திருப்பி விட்டுட்ட, இனி நீதான் எனக்கு முதல் எதிரி என்று கூறுகிறான். சக்தி அதிர்ச்சி அடைகிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியை காணாதவறாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...