இந்த படமாவது மிர்ச்சி சிவாவுக்கு கை கொடுக்குமா?.. சூது கவ்வும் டீசர் எப்படி இருக்கு?..

Published:

அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சூது கவ்வும் 2 டீசர் வெளியாகி உள்ளது. சென்னை 600028 படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக இருந்த சிவாவை வெங்கட் பிரபு தனது படத்தில் நடிக்க வைத்தார். அடுத்து அவர் இயக்கிய சரோஜா படத்திலும் மிர்ச்சி சிவா நடித்திருந்தார்.

சூது கவ்வும் 2 டீசர்:

மங்காத்தா, மாநாடு மற்றும் கோட் என பெரிய படங்களை இயக்கும் போது வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜிக்கு வாய்ப்பு கொடுப்பது போல மிர்ச்சி சிவாவுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை.

அவருக்கான கதாபாத்திரங்கள் அந்த படத்தில் இல்லாத நிலையில், நடிக்கவில்லை என சமீபத்திய பேட்டியில் மிர்ச்சி சிவாவே கூறியிருக்கிறார்.

சி. எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் மிர்ச்சி சிவாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் இரண்டாம் பாகமும் அவருக்கு கை கொடுத்தது. ஹாலிவுட்டில் பிரபல படங்களை ஸ்பூஃப் செய்வது வழக்கம். அதே பாணியில் தமிழ் சினிமாவில் பிரபல தமிழ் படங்களை கலாய்த்து அமுதன் இயக்க சிவா அட்டகாசமான வெடிப்பை வெளிப்படுத்தினர்.

சிவா கலக்கினாரா? சொதப்பினாரா?:

ஆனால் அந்த படத்துக்கு பிறகு சிவா நடிப்பில் வெளியான பல படங்கள் சரியாக வரவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக சிவா நடித்த பார்ட்டி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. கடைசியாக ஒரு நடித்த இடியட் மற்றும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சுமோ திரைப்படம் உருவாக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னமும் வெளியாகவில்லை. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டது போல இந்தப் படமும் ரிலீஸ் ஆகாமல் காலதாமதம் ஆகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக சிவா சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாதியை நவீன் குமாரசாமி இயக்கவில்லை. மேலும் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சிவா நடித்துள்ள படத்தின் டீசர் நேற்று வெளியானது.

டீசரை பொருத்தவரையில் முதல் பாகம் சூதுகவ்வும் படத்தை பார்த்தது போலவே காட்சிகள் அமைந்துள்ளன. புதிதாக எந்த ஒரு விஷயமும் இருப்பது போல தெரியவில்லை. விரைவில் வெளியாக உள்ள இந்த படமும் சிவாவுக்கு வெற்றியைத் தருமா என்பது சந்தேகம் தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...