நான் செத்தா இதை செய்வியா? சிவாஜி கேட்ட கேள்வி.. சொன்னதை செய்து காட்டிய ரஜினி..!

Published:

சிவாஜி கணேசன் ஒரு காலகட்டத்தில் நடிப்பில் தனது திறமையால் அசத்தி கொண்டிருந்தார் என்றால் அதற்கு அடுத்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் தனது திறமையை வெளிப்படுத்தினார்.சிவாஜி கணேசன், ரஜினி என இருவருமே சிறந்த நடிகர்களாக தங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களுக்கு எப்போதும் அருமையான விருந்தாகத்தான் இருக்கும். அவ்வகையில் ஐந்து படங்களில் ரஜினியும் சிவாஜி கணேசன் அவர்களும் இணைந்து நடித்துள்ளனர். அதன்படி இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 1978 ஆம் ஆண்டு வெளியான ஜஸ்டிஸ் கோபிநாத்.

திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்

இந்த படத்தில் சிவாஜி கணேசனின் வளர்ப்பு மகனாக ரஜினி நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து நான் வாழவைப்பேன், படிக்காதவன், விடுதலை, இறுதியாக படையப்பா என ஐந்து படங்களில் சிவாஜி கணேசனும் ரஜினியும் இணைந்து நடித்துள்ளனர். இதில் படையப்பா சிவாஜி கணேசனின் கடைசி படமாக அமைந்தது.

இவ்வாறு இருக்க இவர்கள் இருவர் இடையே இருந்த பழக்கவழக்கம் என்பது ஒரு தந்தை மகனுக்கு இடையே இருப்பது போன்றே இருந்துள்ளது. ரஜினியை சிவாஜி கணேசன் அவர்கள் தனது மகனை போன்று தான் பார்த்துள்ளார். அதேபோன்று ரஜினியும் சிவாஜி கணேசன் அவர்களை தனது தந்தையை விட ஒரு படி மேல்தான் பார்த்துள்ளார்.

சிவாஜி படத்தில் அதிரடி செய்த ரஜினி!.. கடுப்பாகிய படக்குழு!.. பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகர் திலகம்!

அதற்கு ஒரு சம்பவம் சான்றாக உள்ளது. இதனை ரஜினிகாந்த் அவர்களே பகிர்ந்துள்ளார். ஒருமுறை சிவாஜி கணேசன் அவர்கள் ரஜினியிடம் “என்னடா நான் அப்பா செத்தா என் பாடி கூட வரியாடா?” என கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினி “ஏம்பா இப்படி சொல்றீங்க?” என்று கேட்க அதற்கு சிவாஜி அவர்கள் “இல்லடா உண்மைய சொல்றேன் வயசாயிட்டு இருக்கு இல்ல. நீ எங்கே எங்கேயோ போய்க்கிட்டு இருப்ப. அமெரிக்கா, லண்டன், இமயமலைன்னு அது இதுன்னு சுத்திட்டு இருப்ப. நீ வருவ இல்ல?” என மீண்டும் கேட்டுள்ளார். அதற்கு ரஜினி நான் கண்டிப்பாக வருவேன் என கூறியுள்ளார்.

பேட்ட 2 திரைப்படத்திற்கு தயாரான ரஜினி! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு கொடுத்த அன்பு கட்டளை!

ரஜினி கூறியது போன்றே 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி சிவாஜி கணேசன் அவர்கள் இறந்த சமயத்தில் அவரது சடலத்துடன் இறுதி பயணத்தில் ரஜினி கலந்து கொண்டுள்ளார். இதனை ஒரு நிகழ்ச்சியில் ரஜினி அவர்கள் பகிர்ந்த போது தனது தந்தையின் சடலத்துடன் கூட தான் சென்றதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாகவே ரஜினி அவர்கள் சிவாஜி கணேசனை தனது தந்தையை விட ஒரு படி மேல் பார்த்துள்ளார் என புரிந்து கொள்ள முடியும்.

மேலும் உங்களுக்காக...