புஷ்பா பட பாடலுக்கு நடனமாடும் ஷாருக்கான்! வைரல் வீடியோ இதோ!

Published:

மெகாஸ்டார் ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் மாபெரும் ஆக்‌ஷன் திரைப்படம் ஜவான். இந்த படத்தின் முதல் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ப்ரிவியூ அதிரடியாக வெளியாகி ரசிகர் மனத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவான் ப்ரிவியூவில் நயன்தாரா ஒரு ராணுவ வீரராகவும், தீபிகா படுகோனே பாரம்பரிய உடையில் சில ஆக்‌ஷன் செய்வதாகவும், ப்ரியாமணி துப்பாக்கி ஏந்தியதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக இதில் ஷாருக்கான் முடியில்லாமல் வழுக்கைத் தோற்றத்தைக் காட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் படத்தில் சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, ரித்தி டோக்ரா, அஸ்தா அகர்வால், சஞ்சீதா பட்டாச்சார்யா மற்றும் கிரிஜா ஓக் ​​ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் வழுக்கைத் தோற்றத்திலும் நரைத்த தாடியுடன் ஷாருக்கான் ‘ஓ அண்ட்டாவா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையானது அல்ல, ஒரு ரசிகரால் எடிட் செய்யப்பட்டது.

ஜூலை 10, திங்கட்கிழமை ஜவான் படத்தின் ப்ரிவியூவை ஷாருக்கான் வெளியிட்டார். ப்ரிவியூவின் முடிவில், அவர் வழுக்கைத் தோற்றத்திலும் நரைத்த தாடியிலும் இருக்கிறார். மெட்ரோவுக்குள் நுழைந்து தனது தலையில் உள்ள கட்டுகளை கழற்றும்போது அனைவரின் மத்தியில் பைத்தியம் பிடித்தவனைப் போல் அவர் தானாக நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

ஆசையாக வந்த விஜய் ரசிகர்கள்.. கோபத்துடன் துரத்தி அடித்த நிர்வாகி!

அந்த நடன காட்சிகளை அல்லு அர்ஜுனின் வெற்றிப் படமான புஷ்பாவின் ‘ஓ அண்ட்டாவா’ பாடலுடன் இணைத்து கலக்கலாக எடிட் செய்த ரசிகர் ஒருவர், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 2022 இல் வெளியான ‘ஓ அண்ட்டாவா’ பாடலுக்கு சமந்தா ரூத் பிரபு கவர்ச்சியாக நடனமாடியிருப்பார். அவரின் நடனமும், பாடல் வரிகளும் மக்கள் மனதில் பிரபலமடைந்தது மாஸ் ஹிட் அடித்தது.

மேலும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...