ஆசையாக வந்த விஜய் ரசிகர்கள்.. கோபத்துடன் துரத்தி அடித்த நிர்வாகி!

நடிகர் விஜய் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் மீது கோபமடைந்த புஸ்லி ஆனந்த் அவர்களை அங்கிருந்து கோவமாக விரட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் 234 தொகுதி செயலாளர்களில் இன்று நடைபெறும் கூட்டத்தில் 117 தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்ற செயலாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தை முடித்துவிட்டு விஜய் தனது வீட்டிற்கு வரும் நேரத்திற்க்காக பலர் அவரது வீட்டின் முன் காத்திருந்தனர். விஜய் வரும் நேரத்தில் ரசிகர்கள் செய்த சேட்டை காரணமாக கோபமடைந்த மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் ரசிகர்களை அப்பகுதியில் இருந்து போக சொல்லி கூறினார்.

யோகிபாபுக்கு தல டோனி கொடுத்த ஐபில் வாய்ப்பு.. ஒரு நொடி அதிர்ந்து போன அரங்கம்!

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அங்கேயே நின்று கொண்டிருந்த ரசிகர்களிடம் தனது கோப முகத்தை புஸ்லி ஆனந்த் வெளிப்படுத்தினார்.

சாலையில் நின்று கொண்டிருந்த ரசிகர்களை போக சொல்லியும் போகாததால் கோபமடைந்த புஸ்லி ஆனந்த் அவர்களை திட்டி அங்கிருந்து போக சொல்லி விரட்டினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews