பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் குவா..குவா.. அசத்தலான போட்டோ ஷுட் அப்டேட் கொடுத்த நடிகை

Published:

கடந்த 2004-ல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் முலம் தனுஷின் தங்கையாக சினிமா உலகில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடித்த கிழக்கு கடற்கரைச் சாலை படத்திலும் நடித்திருந்தார். மேலும் சினிமா வாய்ப்புகள் பெரிதும் வராத நிலையில் சீரியல் பக்கம் தாவினார்.

கடந்த 2007-ல் சன்டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து ராஜா ராணி, செம்பருத்தி, வாணி ராணி போன்ற பிரபல சீரியல்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். தற்போது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பொன்னி, மோதலும் காதலும் ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியா பவானி சங்கர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் இவருக்கு ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அசோக் என்பவரைத் திருமணம் முடித்தார். இத்தம்பதியினருக்கு சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை வளர்ப்புக்காக இடையில் சிரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். மேலும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இவர் போடும் போஸ்ட்கள் மற்றும் ரீல்ஸ்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது.

சீனு இராமசாமியை வம்புக்கு இழுத்த புளு சட்டை : இப்படியா கலாய்கிறது..!

தற்போது மீண்டும் கர்ப்பம் தரித்த இவர் இன்னும் சில மாதங்களில் இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகப் போகிறார். இதனைத் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி தற்போது அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி தான் மீண்டும் தாய்மை அடைந்ததை அறிவித்திருக்கிறார். இதனால் இவரது ரசிகர்கள் கமெண்ட்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் முதல் குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு அதில் தனது முதல் குழந்தைக்கு ‘நான் அக்காவாகப் போகிறேன்‘ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிவித்துள்ளார்.

தற்போது Pregnancy Photo Shoot கலாச்சாரம் என்பது பல்வேறு இடங்களிலும் பரவி வரும்வேளையில் தன் தாய்மையை போட்டோ ஷுட் மூலம் உலகுக்கு அறிவித்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

மேலும் உங்களுக்காக...