சீனு இராமசாமியை வம்புக்கு இழுத்த புளு சட்டை : இப்படியா கலாய்கிறது..!

கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சீனு ராமசாமி. யதார்த்த கதைக் களங்களையும், மக்களின் வாழ்வியலை திரை மொழியில் அழகாகச் சொல்வதிலும் கைதேர்ந்த இயக்குநர். தென்மேற்குப் பருவக் காற்று, தர்மதுரை, மாமனிதன், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தனது திரைப்படங்கள் மூலம் அழகாக வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொன்னவர் தனது உண்மையான வாழ்வில் கோட்டை விட்டு விட்டாரோ என்று சந்தேதிக்கத் தோன்றும் அளவிற்கு தற்போது அவரைச் சுற்றி சர்ச்சைக் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளது.

அண்மையில் பத்திரிகையாளர் வலை பேச்சு பிஸ்மி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் சீனு இராமசாமி இடம், பொருள், ஏவல் படத்தில் நடித்த நடிகையிடம் எல்லை மீறியதாகவும், அவருக்கு டார்ச்சர் கொடுத்தாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவிக்க திரையுலகமே சற்று ஆடிப் போனது.

நம்பியார் பார்த்த அந்த வேலை!.. தலை தெரிக்க ஓடிய விக்ரமன்.. மனுஷன் இப்படியா பண்ணுவாரு..?

ஏனெனில் சீனு இராமசாமியின் படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களாக அமைந்திருக்கும். மேலும் தாய்மையைப் போற்றும் படங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பார். இந்நிலையில் இவரின் மேல் இப்படி ஒரு பழியா என திரையுலகைச் சேர்ந்தவர்களும், அவரின் இரசிகர்களும் அதிர்ச்சியாகினர்.

மேலும் இதுகுறித்து சினிமா விமர்சகரான புளுசட்டை மாறன்  x தளத்தில் சீனு இராமசாமியை ”பெண்களை தெய்வமாக மதிப்பதில் தர்மதுரை. தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை பத்திரமாக பார்த்து கொள்வதில் மாமனிதன். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் பெண்களிடம் யாராவது தவறாக நடந்தால்.. அதை தட்டிக்கேட்கும் இடி முழக்கம்.“ என அவரது படங்களின் தலைப்புகளே வைத்தே அவரைக் கிண்டல் செய்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு வைரலாகப் பரவி வருகிறது.

seenu

தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு சீனு இராமசாமி அளித்த விளக்கத்தில், “ஒரு குப்பை கதை படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய அந்த நடிகை (இடம் பொருள் ஏவல் படத்திற்காக இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி) வீடியோ க்ளிப்பை வெளியிட்டு, நான் அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டிருந்தால் அவர் எதற்காக எனக்கு நன்றி சொல்ல வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.