பிக் பாஸ் 8: கொஞ்சம் பாத்து பேசு.. பிக் பாஸ் பத்தி சாச்சனா சொன்ன வார்த்தை.. எச்சரித்த சத்யா..

By Ajith V

Published:

மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியுள்ள நிலையில் தற்போது இருக்கும் 15 போட்டியாளர்களும் மற்றவர்கள் செய்த தவறை உணர்ந்து அதற்கேற்ப தங்களின் ஆட்டத்தை நகர்த்தி வருகின்றனர். மேலும் மற்றவர்கள் வெளியே செல்லும்போது மக்களின் ஆதரவும், அவர்களின் விமர்சனமும் எப்படி இருக்கிறது என்பதையும் அனைத்து போட்டியாளர்களும் கவனித்து வருவதால் எப்படி தங்களை வெளியே பார்க்கிறார்கள் என்பதையும் அவர்களால் யூகிக்க முடிகிறது.

இதனால் மற்ற போட்டியாளர்களை பின்னே தள்ளிவிட்டு அனைத்து டாஸ்க்கிலும் முன்னேறி அடுத்தடுத்த வாரத்தில் செல்ல வேண்டும் என்பதுதான் பலரின் இலக்காகவும் இருந்து வருகிறது. முந்தைய சீசன்களில் கூட சிலர் மிகுந்த நட்புடன் இருந்தனர். ஆனால் இந்த முறை வந்த போட்டியாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தனியாக ஆட வந்ததையும், நட்பு பாராட்ட வரவில்லை என்பதையும் உணர்ந்து ஆடி வருகின்றனர்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு டாஸ்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் விறுவிறுப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டம் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்திருந்த நிலையில் மிக கோலாகலமாகவும் அவை நடந்து முடிந்தது. தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்பது பற்றி ரசிகர்கள் பல பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சாச்சனா தெரிவித்த கருத்து ஒன்று அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சீசனின் இளம் போட்டியாளராக இருக்கும் சாச்சனா மீது ஆரம்பத்தில் பலருக்கும் ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பல நேரங்களில் அவரது பேச்சும் மற்ற போட்டியாளர்கள் பற்றி அவர் சொல்லும் விஷயங்களும் சர்ச்சையையே கிளப்பி வருகிறது. அவர் தனது வயதுக்கேற்ற முறையில் ஆடுவதாகவும் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தான் அவரது உடல் நிலையும் சற்று மோசமடைந்திருந்த நிலையில் இப்போது மெல்ல மெல்ல தேறியும் வருகிறார். அப்போது சாச்சனா பற்றி பேசும் சத்யா, ‘இந்த பொண்ணு பிக் பாஸ் வீட்ல வந்ததுல இருந்து டாக்டரும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருக்கா’ என்று கூறுகிறார். இதனை கேட்டதும் பதில் சொல்லும் சாச்சனா, ‘ஜோசியத்தில் நேரம் சரியில்லைன்னு சொல்ற மாதிரி எனக்கு அமைந்துள்ளது. கட்டம் நல்லா இருந்தா நான் எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு வர போறேன்’ என கூறுகிறார்.

இதனைக் கேட்டதும் பதறிப்போன சத்யா, ‘வார்த்தையை விடாத. பாத்து பேசு குட்டி’ என்று எச்சரிக்கவும் செய்கிறார். ஆனாலும் ஏற்றுக் கொள்ளாத சாச்சனா, நான் சரியாகத்தானே கூறினேன் என்றும் தன்னுடைய வார்த்தையை நியாயப்படுத்துகிறார்.