சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சசிகுமார்.
அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் எந்த திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். இது தவிர சுப்பிரமணியபுரம் பசங்க ஆகிய திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் போன்ற குடும்ப கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார் சசிகுமார்.
சசிகுமார் படம் என்றாலே எந்த ஒரு ஆபாசமும் இருக்காது குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. உடன்பிறப்பே கொடிவீரன் போன்ற குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் பல படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார் சசிகுமார்.
தற்போது சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவர் நடித்த பிரீடம் திரைப்படம் வருகிற ஜூலை பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், ரிதன்யா மரணத்தைப் பற்றி தொகுப்பாளர் கேட்டபோது சசிகுமார் வரதட்சணை என்பது எல்லா காலத்திலும் தவறான விஷயம்தான். பணமா உயிரா என்று பார்க்கும்போது உயிர்தான் மிகவும் விலைமதிக்க முடியாத ஒன்று. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலைமை மாறவேண்டும் என்று பகிர்ந்து இருக்கிறார் சசிகுமார்.