அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரது நகைச்சுவையில் பெரும்பான்மையானவை அவரது மாமியார் மற்றும் கணவரைக் கிண்டலடிப்பதாக இருப்பதால் அனைவராலும் விரும்பப்பட்டது.
அதன்பின்னர் இவரும் இவரது கணவரும் இணைந்து மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றதன்மூலம் பிரபலமாகினர். மேலும் அதன்பின்னர் நிஷா குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாகவும் உருவெடுத்தார்.
வெள்ளித் திரையிலும் ஆண் தேவதை, மாரி 2 போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளநிலையில் டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்துவரும் அவர் தனது மகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார். மேலும் தன் மகள் குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, ” தாலாட்டு பாடுறது இன்னிக்கி எல்லாரும் மறந்துட்டாங்க, எல்லா குழந்தைக்கும் தாலாட்டு பாடுறது நல்லது.
நான் தாலாட்டுப் பாட என் மகள் தாளம் போடுகிறாள். கண்டிப்பா அவளுக்கு உங்களோட ஆசீர்வாதம் வேண்டும்” என்று கூறியுள்ளார்.