இன்றைய இயக்குனர்களை அப்பவே தோலுரித்த ஸ்ரீதர்… அப்படியே புட்டு புட்டு வச்சிட்டாரே..?!

தமிழ்சினிமா உலகம் பல புதுமையான இயக்குனர்களையும், புரட்சிகரமான இயக்குனர்களையும் தன்னகத்தே கொண்டது. இவர்கள் தான் சூப்பர்ஸ்டார்களையும், சூப்பர் ஆக்டர்களையும் திரைக்குக் கொண்டு வந்தவர்கள். பல முகபாவனைகளை திரையில் வடித்தவர்கள். அழகு என்றால் அப்படி ஒரு…

தமிழ்சினிமா உலகம் பல புதுமையான இயக்குனர்களையும், புரட்சிகரமான இயக்குனர்களையும் தன்னகத்தே கொண்டது. இவர்கள் தான் சூப்பர்ஸ்டார்களையும், சூப்பர் ஆக்டர்களையும் திரைக்குக் கொண்டு வந்தவர்கள்.

பல முகபாவனைகளை திரையில் வடித்தவர்கள். அழகு என்றால் அப்படி ஒரு அழகு என ஹீரோயின்களையும், ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல் என்று ஹீரோக்களையும் திரையில் காட்டி நம் விழிகளை விரிய வைத்தவர்கள் தான் இயக்குனர்கள். சென்டிமென்ட், காதல், காமெடி, சஸ்பென்ஸ், த்ரில்லர் என பல சிறப்பம்சங்களைக் கொண்டு வந்து ரசிகர்களைக் குதூகலப்படுத்தியவர்கள் தான் இயக்குனர்கள். இவர்கள் அன்றும் இன்றும் எப்படி இருந்தனர் என்று பார்க்கலாமா…

தமிழ்சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இருந்த இயக்குனர்கள் எல்லாருமே தங்களுக்கு என தனித்தனி பாணியை வைத்துக் கொள்கின்றனர். ஏபி.நாகராஜன்னா பக்தி படங்கள், கேஎஸ்.கோபாலகிருஷ்ணன்னா குடும்பப்படங்கள், இன்னொரு பக்கம் ஏ.பீம்சிங் ‘ப’ வரிசையிலே பல வெற்றிப்படங்களைத் தந்தாலும், குடும்பப்படங்களை இயக்குவதில் வல்லவர். ஸ்ரீதர் ஒரு புதுமை இயக்குனர்.

புதுமையான கதைக்கருவை இயக்குவதில் வல்லவராக இருந்தார். இப்படி தனித்தனி அடையாளங்களோடு இயக்குனர்கள் இருந்தனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் இப்படி தனித்தனி அடையாளங்களோடு இயக்கும் இயக்குனர்கள் அறவே மாறிட்டாங்க. அதைப்பற்றி ஸ்ரீதரே ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

இன்றைய இயக்குனர்களைப் பொருத்தவரைக்கும் ஒரே மாதிரி கதையைத் தான் பல இயக்குனர்கள் படமாக்குறாங்க. அதனால்தான் அவங்களால தனித்துவம் மிக்க இயக்குனர்களாக இருக்க முடியலன்னு ஸ்ரீதர் அந்தக் காலகட்டத்துலயே பதிவு செய்துள்ளார். அது இன்றைக்கும் பொருந்துகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.