சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு! காரணம் தெரிஞ்சா ஆடி போய்ருவிங்க!

Published:

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் சிம்பு, விஷால், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோருக்கு நடிப்பதற்கு ரெட் கார்டு விதித்து தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் போக்கு உருவானால் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுவிடும் என்பது வழக்கம். முன்னதாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. அவரின் திரையுலக மவுசு முற்றிலுமாக முடிந்து போனது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஒரு நெருக்கடியில் தான் தற்போது முன்னணி நடிகர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க திட்டமிட்டு அதற்கான பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிம்பு, விஷால், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா, அதர்வா ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா மீது ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். விஷால் மீது கேபி பிலிம்ஸ் பாலுவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக தமிழ் சினிமாவின் பிஸியான காமெடியனான யோகிபாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

திரிஷாவுடன் முத்த காட்சி குறித்து ஓப்பனாக பேசிய சித்தார்த்! அதுக்குன்னு இப்படியா…

மேலும் நடிகர் சங்கம் அளிக்கும் பதிலை வைத்து அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்ற செய்தி தற்போது வைரலாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...