41 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனிக்காட்டு ராஜாவாக களமிறங்கிய ரஜினி !

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினியின் தனிக்காட்டு ராஜா திரைப்படம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ரிலீஸ் செய்யப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியா ஆகியோர் இணைந்து நடித்த படம் தனிக்காட்டு ராஜா. சுரேஷ் தயாரிப்பில் இயக்குனர் வீசி குகநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் நீதிக்காக போராடும் புரட்சிகரமான இளைஞனாக சூரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியாகி ரஜினியின் வெற்றிப்பட வரிசையில் ஒன்றாக அமைந்த தனிக்காட்டு ராஜா படம் தற்ப்பொழுது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் ரஜினியின் கட் அவுட்க்கு ரஜினி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.

சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு RED CARD ! காரணம் தெரிஞ்சா ஆடி போய்ருவிங்க!

இது தவிர பால்குடம் எடுத்து வந்து ரசிகர் ஒருவர் அமர்க்களப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையரங்கு உள்ளே படம் திரையிட்ட உடனே ரஜினி தோன்றும் காட்சிகளுக்கும், அவர் பேசும் வசனங்களுக்கும் கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

ரஜினியின் புதிய படம் திரையரங்கில் வெளியானால் எப்படி ரசிகர்கள் படையெடுப்பார்களோ அதுபோலவே இந்த படத்திற்கும் ரஜினி ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...