கலைஞர் டிவியில் ‘ரஞ்சிதமே’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் நடித்த நடிகருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அவருடைய மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரஞ்சிதமே’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் நேத்ரன். இவர் நடிகர் மட்டுமின்றி நல்ல டான்ஸரும் கூட. 25 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்து வரும் இவரது மனைவி தீபாவும் சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேத்ரன் – தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் அபிநயா சமீபத்தில் ’கனா காணும் காலங்கள்’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த நிலையில் அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தனது தந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தனது பதிவில் ’எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை, அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தான் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆனால் அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என்று கூறியதை அடுத்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். மேலும் கல்லீரலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது உள்ளார்.
இதை உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் என் அப்பாவுக்காக நீங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த பிராத்தனைகளால் அவர் சீக்கிரம் குணமாகி வருவார் என்று நம்புகிறேன். அப்பா நீங்கள் சீக்கிரம் குணமாகி வரவேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கண்டிப்பாக உங்கள் அப்பா விரைவில் குணமாகி வருவார் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘ரஞ்சிதமே’ தொடரிலிருந்து நேத்ரன் விலகி இருந்தார் என்ற நிலையில் அவர் விலகியதற்கான காரணம் இப்போது தான் தெரிய வருகிறது.