வேலை செய்யும் வீட்டில் திருடி DSLR கேமரா வாங்கிய பெண்.. யூடியூபில் பிரபலமானதால் அம்பலம்..!

By Bala Siva

Published:

டெல்லியில் வேலை செய்யும் வீட்டில் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை திருடி அதை விற்று, அதன் மூலம் விலை உயர்ந்த கேமரா வாங்கி யூடியூபில் பிரபலமான நிலையில் அந்த பெண் தற்போது சிக்கி உள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டெல்லியில் உள்ள ஒரு பிரபலத்தின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வீட்டில் அவ்வப்போது நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் திருடு போவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் திடீரென வேலை செய்த பெண் வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. அவரைப் பற்றிய மற்ற தகவல்களும் எதுவும் இல்லை. இந்த நிலையில் வேலை செய்யும் வீட்டில் பணம் நகை ஆகியவற்றை  திருடிய பெண், அந்த பணத்தை கொண்டு ஒரு விலை உயர்ந்த DSLR கேமரா வாங்கி உள்ளார். அந்த கேமரா ஒரு லட்சத்துக்கு மேல இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த கேமரா மூலம் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். குறுகிய நாட்களில் அவரது வீடியோ வைரலாகி அவருக்கு ஃபாலோயர்கள் குவிந்த நிலையில் தான் திருடு போன வீட்டின் உரிமையாளர் அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக அவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது அவர் தான் வேலை செய்த வீட்டில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக ஒப்புக்கொண்டார். அந்த பணத்தில் தான் அவர் DSLR கேமரா வாங்கியதாகவும் ரிலீஸ் வீடியோக்களை பதிவு செய்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உங்களுக்காக...