ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதை இது தானா.. ரன்னிங் டைம்வுடன் வெளியான மாஸ் அப்டேட்!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் இப்படம் மிகவும் முக்கியமானது. சூப்பர் ஸ்டாரின் கடைசிப் படமான அண்ணாத்த பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தவறியது, அதே போல நெல்சனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான பீஸ்ட் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இருவரும் ஜெயிலர் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்த இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி வெளியாக உள்ளது.

தற்பொழுது ஜெயிலர் படத்தில் இருந்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் இரண்டரை மணி நேரம் ரன்னிங் டைம் கொண்டதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் கதை காப்பி அடிக்கப்பட்ட கதையா.. யாரு இந்த வேலையை செய்தது தெரியுமா?

மேலும் இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்தது, அதை தொடர்ந்து ரஜினியின் பொறுப்பில் இருக்கும் சிறைச்சாலையில் கடத்தல் கும்பலை சேர்ந்த தலைவன் சிறைப்படுத்தப்படுகிறார்.

அந்த தலைவனை காப்பாற்ற அவனது கும்பல் செய்யும் சதி வேலைகளை ரஜினி எப்படி தடுத்து மாஸ் காட்டுகிறார் என்பது தான் முழுக்கதை. மேலும் வைரலாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா இல்லை கட்டுக்கதையா என தெரிந்து கொள்ள படம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

 

மேலும் உங்களுக்காக...