இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிகர் விவேக்.. புது முயற்சியில் இயக்குனர் சங்கர்!

By Velmurugan

Published:

1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. நடிகர் கமல் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த 2018 ஆண்டு இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியன் இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

இந்தியன் படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான்,அனிருத் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைப்பதாக தகவல் வெளியானது.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட்ஸ் இணைந்து 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.தற்போது இப்படம் குறித்த மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் கதை காப்பி அடிக்கப்பட்ட கதையா.. யாரு இந்த வேலையை செய்தது தெரியுமா?

இப்படத்தில் தமிழ் நடிகர் விவேக், மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தற்பொழுது உயிருடன் இல்லை. அவர்களுக்கு பதிலாக மற்றோரு நடிகரை நடிக்க வைத்தால் படப்பிடிப்பு முதலில் இருந்து தான் தொடங்க வேண்டும்.

அதனால் இயக்குநர் சங்கர் தற்போது மறைந்த இரு நடிகர்களையும் CGI (கணினியால் உருவாக்கப்பட்ட இமேஜரி) மூலம் காட்ட முடிவு செய்துள்ளார். படத்தில் சில காட்சிகளில் விவேக் மற்றும் நெடுமுடி சிஜிஐ வடிவில் காணப்படுவார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது.

 

மேலும் உங்களுக்காக...