200 நாட்களுக்கு மேல் திரையில் கொடிகட்டி பறந்த ரஜினியின் 8 மாஸான திரைப்படங்கள் ஒரு பார்வை!

Published:

தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உலகளவில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஷிவா ராஜ்குமார், டைகர் ஷெராஃப், சுனில் மற்றும் யோகி பாபு என முக்கிய பிரபலங்கள் நடித்து ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூலை தொட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

மேலும் ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து தலைவர் 170வது படத்திற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிரபல இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் இணைந்து ரஜினி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தடுத்து வெற்றி படங்களின் நடிப்பின் மூலம் நான் தான் என்றும் சூப்பர் ஸ்டார் என நிரூபித்து வருகிறார். ரஜினிக்கு போட்டி ரஜினி தான் என கூறும் அளவிற்கு அவர் நடிப்பில் வெளியாகி 200 நாட்கள் கடந்த படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் முதல் உள்ள திரைப்படம் – 16 வயதினிலே

1977 ஆம் ஆண்டு பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த படம் தான் பாரதி ராஜாவுக்கு முதல் திரைப்படம். இப்படத்தில் கமல்ஹாசன் , ஸ்ரீதேவி , ரஜினிகாந்த் , காந்திமதி , மற்றும் கவுண்டமணி என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பரட்டை என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். இந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றி கொடியை பறக்க விட்டது.

இரண்டாவது திரைப்படம் – பில்லா

1978 ஆம் ஆண்டு ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடிப்பில் இந்த பில்லா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தான் ரஜினி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் 260 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

மூன்றாவது திரைப்படம் – மூன்று முகம்

1982- ஆம் ஆண்டு ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் மூன்று முகம். இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில், அதாவது அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் ஆகிய பாத்திரங்களில் நடித்து கலக்கி இருப்பார். இந்த படத்திற்காக 1982 இல் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த திரைப்படம் ஹிந்தியிலும் ரஜினிகாந்த் நடித்து மிரள வைத்திருப்பார்.

இந்த திரைப்படம் 225 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

நான்காவது திரைப்படம் – மன்னன்

1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் மன்னன். இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 301 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

ஐந்தாவது திரைப்படம் – பாட்ஷா

1995 ஆம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்ஷா. இந்த திரைப்படம் ரஜினிக்கு பெரிய திருப்பு முனையாக இருந்தது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடித்திருப்பார். படத்தில் வில்லனாக ரகுவரன் ஹீரோவிற்கு இணையாக நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மும்பையில் தாதாவாக இருந்த பின்னர் “மாணிக்கம்” என்ற ஆட்டோ ஓட்டுநராக நடித்தார். இந்த திரைப்படம் 360 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

ஆறாவது திரைப்படம் – படையப்பா

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் படையப்பா. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பல நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக மாஸாக நடித்திருப்பார். அதற்காக பிலிம்பேர் விருது ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் 270 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

தளபதி 68வது படத்தின் பூஜை, படப்பிடிப்பு, ஹீரோயின், ரிலீஸ் என அடுத்தடுத்து திணறடிக்கும் மாஸ் அப்டேட் !

ஏழாவது திரைப்படம் – அருணாச்சலம்

சுந்தர்.சி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அருணாச்சலம். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்பா, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 204 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

எட்டாவது திரைப்படம் – சந்திரமுகி

பி. வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். இந்த படத்தில் மனநல மருத்துவராகவும், வேட்டையன் ராஜாவாகவும் ரஜினி நடித்திருப்பார். அதிரடி திரில்லர் படமாக இந்த திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் ரஜினிக்கு கம்பேக் கொடுத்தது. மேலும், இந்த திரைப்படம் 890 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது என தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் உங்களுக்காக...