தளபதி 68வது படத்தின் பூஜை, படப்பிடிப்பு, ஹீரோயின், ரிலீஸ் என அடுத்தடுத்து திணறடிக்கும் மாஸ் அப்டேட் !

தளபதி விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விஜய் நடிக்கும் 2வது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்த நிலையில் தற்பொழுது படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளது.

லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இந்த படத்தின் இறுதி காட்சிகளில் லீட் கொடுப்பதற்கான படப்பிடிப்பில் தற்பொழுது லோகேஷ் ஈடுபட்டு வருகிறார். இந்த படப்பிடிப்பில் விஜய் இணையவில்லை என்பது தற்போதைய தகவல் ஆகும். மேலும் லியோ படத்தில் பல ஆண்டுகள் கழித்து திரிஷா ஹீரோயினாக இணைந்துள்ளார். பொன்னின் செல்வன் படத்திற்கு பின் திரிஷாவின் திரை வாழ்க்கை பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் மனோபாலா, கைதி படத்தில் கலக்கிய ஜார்ஜ் மரியான், மேத்தியூ தாமஸ், பாலிவுட் ஸ்டாரான சஞ்சய் தத், மலையாள சூப்பர் ஸ்டாரான நிவின்பாலி, கமல்ஹாசன், மன்சூர் அலிகான், வில்லன் நடிகர் பாபு ஆண்டனி, நடிகை அபிராமி, நடிகர் சூர்யா, கைதி படத்தில் மிரட்டலாக நடித்த அர்ஜுன் தாஸ், பகத் பாசில் இவர்கள் மட்டும் இல்லாமல் இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஸ்கின், பாலிவுட் நடிகர் ஸ்மித் , நடிகர் ஹாரிஸ் உத்தமன், நடிகை பிரியா ஆனந்த், ஆக்சன் கிங் அர்ஜின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, நடிகர் சத்தியராஜ், நடிகர் கதிர் என பல பிரபலங்கள் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க உள்ளார். இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தின் மீது கூடுதல் ஆர்வத்தில் உள்ளனர்.

மேலும் தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்த மாசான பல அப்டேட்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் மாதம் லியோ படத்தின் வெளியீட்டிற்கு பின் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த திருமலை படத்திற்கு பின் இந்த ஒரு ஜோடி எந்த ஒரு படத்திலும் இணையவே இல்லை.

ஜெய்லரின் வெற்றிக்கு பின் நெல்சன் படத்தில் ஹீரோவாக போட்டி போடும் தனுஷ் மற்றும் சிம்பு!

விஜய் அவர்கள் தற்போதைய இளம் ஹீரோயின் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அடுத்தடுத்த படங்களில் முன்னாள் ஹீரோயின்களுடன் இணைந்து ஜோடி சேர்வது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 20 ஆண்டுகள் கழித்து ஜோதிகாவும் விஜய்யும் இணைந்து நடிப்பதை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 68வது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews