சென்னை மெட்ரோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத்தில் ’தலைவர் 168’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் பேட்டியை தவிர்த்துவிட்டு…


f1063a3b90e94ba62f255d9aaf361c7c-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத்தில் ’தலைவர் 168’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் பேட்டியை தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலில் தனது வீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சாலை வழியாக காரில் சென்றால் தனது காரை துரத்தி கொண்டு சிலர் வருவதாகவும் இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுவதாகவும் அதனால்தான் மெட்ரோ ரயிலில் ரஜினிகாந்த் பயணம் செய்ததாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியுடன் மெட்ரோவில் பயணம் செய்த சிலர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரோ ரயிலில் உடன் பயணம் செய்த ரசிகரளுக்காக சிரித்த முகத்துடன் செல்பி புகைப்படத்திற்கு ரஜினிகாந்த் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன