பொழுதுபோக்கு

சினிமாவில் அறிமுகமாகும் சந்தோஷ் சிவன் வாரிசு: எந்த படத்தில் தெரியுமா?

518b5f0885e1dbdc67494fc50c36b111-1

திரைத்துறையில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் பலர் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வருவதை கடந்த பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம்

அந்த நிலையில் தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் மகன் சர்வஜித் என்பவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்
கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தயாரித்து சிறப்பு வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தில் சந்தோஷ் சிவன் மகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சுரேஷ்கோபி சோபனா கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Avatar photo
Staff