இன்று தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருப்பவர்தான் மா.சுப்ரமணியன். இவர் அமைச்சராக ஆவதற்கு முன் சென்னை மேயராக இருந்தார். அடிப்படையில் வழக்கறிஞரான மா.சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பணியாற்றியிருக்கிறார். மேலும் திமுகவில் கடந்த 1976- ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வருகிறார்.
வாணியம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட மா.சுப்ரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் தான் வளர்ந்தது படித்தது எல்லாமே. அதனால் சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு வீட்டில் ஒருவராக அறிமுகமானவர். தீவிர ஸ்டாலின் ஆதரவாளராக இருக்கும் மா.சுப்ரமணியன் ஓர் உடற்பயற்சிப் பிரியர் ஆவார். தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர். இன்றும் வாக்கிங், மாராத்தான், நீச்சல், ஓட்டப்பந்தயம் என விளையாட்டுக்களில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.
இவர் கடந்த 2006-2011ம் ஆண்டு காலகட்டங்களில் திமுக அரசு கட்டிலில் இருந்த போது சென்னை மாநகரின் மேயராகப் பணியாற்றி இருக்கிறார். அப்பொழுது இவருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் நட்பு ஆரம்பமாகியிருக்கிறது. ஒருமுறை இவர் தனது மகனின் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக ரஜினியின் பி.ஏ.விடம் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டிருக்கிறார்.
கௌதம் மேனனுக்குத் தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சர்பிரைஸ் பாடல்.. நெகிழ்ந்து போன GVM
பின் இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு 10 மணியளவில் ரஜினியிடம் இருந்து போன் வந்துள்ளது. நீங்கள் அழைப்பிதழ் கொடுக்க வருகிறேன் என்று கூறினீர்களாமே நீங்கள் வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ரஜினி. உடனே ஷாக் ஆன மா.சுப்ரமணியன் பிறகு ரஜினி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்.
அன்று ரஜினி மா. சுப்ரமணியத்திடம் உங்கள் பணிகளை நான் கவனித்து வருகிறேன். தினசரி நேரமே இல்லாமல் உழைத்து வருகிறீர்கள். அப்படி இருக்க உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. எனவே நான் மகனின் திருமணம் என்று சொன்னீர்களே அதுவே போதும் நான் வந்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு மா.சுப்ரமணியன் இல்லை நான் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்தால் தான் மரியாதையாக இருக்கும் என்று கூற ரஜினி மறுபடியும் வேண்டாம் என்று சொல்ல பிறகு தன் மகனையே அனுப்பி அவருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் மா.சுப்ரமணியன்.