கௌதம் மேனனுக்குத் தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சர்பிரைஸ் பாடல்.. நெகிழ்ந்து போன GVM

Published:

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மாணவர்தான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தனது குருநாதரைப் போலவே ஸ்டைலிஷ் படங்களை இயக்கி 2k தலைமுறையின் கமர்ஷியல் இயக்குநராக வலம் வருகிறார். பெரும்பாலும் கௌதம் படங்களில் பாடல்கள் பேசப்படுவது வழக்கம். ஏனெனில் பாடல்கள் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களாகவும் அதே சமயத்தில் மேக்கிங் என்பது புதுவிதமாகவும் இருக்கும். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜே இசைமைத்திருப்பார்.

இருந்த போதிலும் மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் கௌதம் மேனன் உதவி இயக்குநராகப் பணியாற்றி போது தான் எடுக்கும் முதல் படத்தில்  ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க விரும்பியிருக்கிறார். இருப்பினும் அவர் எடுத்த முதல் படத்தில் அது நிகழாமல் போகவே ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்தார் GVM. இவர்கள் கூட்டணி பின் அடுத்தடுத்த படங்களில் பாடல்களில் கலக்கியது. பெரும்பாலும் GVM படங்களில் பாடலாசிரியராக தாமரைதான் எழுதியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லா இருக்கு ஆனாலும் இந்த மாதிரி கிளைமேக்ஸ் வேண்டாம்.. ரஜினி ரசிகர்களை திருப்திப் படுத்த ஏ.வி.எம் சரவணன் செஞ்ச மாற்றம்..

இந்நிலையில்  அவர் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த படம் தான் விண்ணைத் தாண்டி வருவாயா. சிம்பு, திரிஷாவின் ஜோடிப் பொருத்தம் திரையில் அவ்வளவு அழகாக காட்டப்பட்டிருக்கும். மேலும் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாடினர். பாடல்கள் மற்றும் காட்சியமைப்பு திரையில் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மன்னிப்பாயா‘ பாடலானது கௌதம் வாசுதேவ் மேனனுக்குத் தெரியமாலேயே ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு சர்பிரைஸாக கம்போஸிங் செய்து கொடுத்துள்ளார். இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் எழுதி முடித்த நிலையில் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் தாமரையிடம் மேலும் ஒரு பாடலை வாங்கியிருக்கிறார். ஆனால் இது கௌதம் மேனனுக்குத் தெரியாது. பின் ரஹ்மான் கௌதமை தனது ஸ்டுடியோவிற்கு வரச் செய்து அங்கு ‘மன்னிப்பாயா‘ பாடலை கம்போஸிங் செய்து காண்பித்திருக்கிறார். இதனால் கௌதம் மேனன் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

அதன்பின் கௌதம் மேனன் தனது அடுத்த படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க கேட்க சில காரணங்களால் நோ சொல்லியிருக்கிறார். எனினும் இவர்கள் கூட்டணி அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களிலும் தொடர்ந்தது. இளையராஜாவின் இசையில் தான் ஒரு படம் இயக்க வேண்டும் என எண்ணி நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இசைஞானியையும் பயன்படுத்திக் கொண்டார் கௌதம் மேனன்.

மேலும் உங்களுக்காக...