தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..

Published:

ஒரு பாடலாசிரியர் என்பது வயதைக் கடந்தும் அதே இளமைத் துள்ளலுடன், சம காலத்திற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றி அந்தத் தலைமுறை மக்களையும் தனது வரிகளுக்கு ரசிகனாக்கினார் என்றால் அது கவிஞர் வாலிதான். இவரின் எழுத்துக்களாலேயே இவர் வாலிபக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் புரட்சி, தத்துவப் பாடல்களை கண்ணதாசன் பார்த்துக் கொள்ள வாலியோ காதல் கானங்களில் இளைஞர்களை உருக வைத்தார்.

இவர் தனது திருமணத்தையே வித்தியாசமாக நடத்தினார் என்பது யாரும் அறிந்திராத விஷயம். ஒரு முறை நாடகம் ஒன்றிற்காக தனது வீட்டில் பல நடிகர் நடிகைகள் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவர் தனது வருங்காலத் துணையைச் சந்தித்திருக்கிறார்.  நாடகம், சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ரமண திலகத்தை தன் வாழ்க்கைத் துணையாக நெஞ்சில் சுமக்க ஆரம்பித்திருக்கிறார் கவிஞர் வாலி.

கௌதம் மேனனுக்குத் தெரியாமல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சர்பிரைஸ் பாடல்.. நெகிழ்ந்து போன GVM

திடீரென்று நாடகத்தினை நிறுத்தச் சொல்லி அந்த கதாயநாயகி இனி நடிக்கமாட்டார் என்று கூறியிருக்கிறார் ஏன் என்று கேட்க அவரை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். இவரிடம் எப்படி தன் காதலை வெளிப்படுத்துவது என்று யோசித்தவர் தனது விண்ணப்பத்தை மளமளவென பாடலாக இயற்ற ஆரம்பித்தார். அந்தப் பாடல் தான் எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்..‘ என்ற பாடல். அப்போது வயது அவருக்கு வயது 33.

ஆனால் அதற்கு முன்பே எம்.ஜி.ஆர் எனது தலைமையில் நானே உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாலியிடம் கூறியிருக்கிறார். ஆனால் திடீரென்று காதலில் விழுந்த வாலி, ரமண திலகத்தினை அழைத்துக் கொண்டு திருப்பதியில் இயக்குநர் யாருக்கும் சொல்லாமல்  இயக்குநர் வி. கோபாலகிருஷ்ணனை மட்டும் அழைத்துக் கொண்டு திருமணம் முடித்திருக்கிறார். அப்போது இவர்கள் திருமண செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.

நமக்குக் கூட சொல்லாமல் விட்டு விட்டாரே என  எம்.ஜி.ஆர் வாலி மீது கோபம் கொண்டுள்ளார். இதனால் பாடல் எழுதவும் வாய்ப்பளிக்காமல் சிறிது காலம் இருந்துள்ளார். இவ்வாறு வாலி தனது மனைவி ரமண திலகத்தைக் கரம் பிடித்தார். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு கடந்த 2014-ல் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இடம்பெற்ற உனக்காகப் பொறந்தேனே என்ற பாடலை வாலி இயற்றிய போது தன் மனைவி மேல் எவ்வளவு அன்பாக இருந்திருக்கிறார் என்பதை உணர்த்தியிருப்பார். இருந்தபோதிலும் வாலிக்கு முன்பே அவர் மனைவி இயற்கை எய்தினார்.

மேலும் உங்களுக்காக...