1979ல் இரண்டு முறை கைதான ரஜினிகாந்த்.. பின்னணியில் யார்?

By Bala Siva

Published:

கடந்த 1979ஆம் ஆண்டு இரண்டு முறை எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு கைதுக்கும் எம்ஜிஆர் தான் பின்னணி என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

mgr rajini

1979ஆம் ஆண்டு வார பத்திரிகை ஒன்றில் சினிமா செய்தியாளராக இருந்த ஒருவர் ரஜினிக்கு எதிராக புகார் அளித்தார். ரஜினி தன்னை தாக்கியதாகவும், தன் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் கொடுத்தார்.

ஐபிஎஸ் கனவு.. ஆளுநர் மாளிகையில் வேலை.. ஏவிஎம் ராஜனின் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு..!

இந்த புகாரின் அடிப்படையில் 1979ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். அவரை ராயப்பேட்டை போலீசார் விசாரணை செய்தனர். நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் அதன் பின்னர் புகார் கொடுத்தவரும் ரஜினியும் சமாதானமாக போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார். ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தபோது படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பியது அவர் மது அருந்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் விமான நிலையத்தில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முடியாததால் அதனை அடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

mgr rajini1

இந்த இரண்டு கைது சம்பவங்களும் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நடந்ததால் இதற்கு அவர் தான் பின்னணி இருந்ததாகவும் கூறப்பட்டது. அதாவது  ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு வருவதால் அதில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் லதா, எம்ஜிஆரிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் எம்ஜிஆர் அதை அனுமதிக்கவில்லை என்றும், இதனை மீறி அவர் ரஜினியோடு நடித்ததாகவும் அதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் ரஜினியை கைது செய்ய எம்ஜிஆர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது ஒரு வதந்தி தானே தவிர எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் நடந்த கைதுக்கும் எம்ஜிஆர் தான் பின்னணி என்று கூறப்பட்டாலும் அதனை அதிமுகவினர் மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்தில் சம்பளம் வெறும் 10 ரூபாய்.. இன்று ரூ.65 கோடி மதிப்பு சொத்து.. யார் இந்த நடிகை..!

லதா போலவே ஜெயலலிதாவும் ரஜினியுடன் நடிக்க கூடாது என்று எம்ஜிஆர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படத்தில் ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில் முதலில் ஜெயலலிதா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

mgr rajini2

அதற்கு அவர் பின்னால் விளக்கம் அளித்த போது ’பில்லா படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு பெரிய அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் தான் நான் நடிக்க மறுத்தேன் என்றும் ரஜினியுடன் நடிக்க கூடாது என்று எந்த எண்ணமும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவில் பில்லா படத்தில் ஜெயலலிதா நடிக்காததற்கு எம்ஜிஆர் தான் பின்னணி என்று கூறப்பட்டது.

10ஆம் வகுப்பு படிக்கும்போதே எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை லதாவின் மறுபக்கங்கள்..!

ஆனால் அதன்பின் காலம் செல்லச் செல்ல இருவரும் ஒரு கட்டத்தில் முதிர்ச்சி அடைந்த உடன் ஒருவரை ஒருவர் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே ஒரு கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பவர் ஜெயலலிதா தான் என்று ரஜினிகாந்த் அவரை புகழ்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.