ஐபிஎஸ் கனவு.. ஆளுநர் மாளிகையில் வேலை.. ஏவிஎம் ராஜனின் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு..!

தமிழ் திரையுலகின் ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராக இருந்த ஏவிஎம் ராஜன் சிறு வயதில் ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஆளுநர் மாளிகையில் நூறு ரூபாய் சம்பளத்தில் வேலைதான். அதன் பிறகு அவர் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம் அவரை வேறு வழியில் பயணிக்க வைத்தது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

avm rajan4

நடிகர் ஏவிஎம் ராஜன் புதுக்கோட்டையை சேர்ந்தவர். சிறு வயதிலேயே  அவருக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அவருக்கு சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக கை எலும்பு முறிந்ததை அடுத்து அவரால் ஐபிஎஸ் கனவை நிறைவேற்ற முடியவில்லை.

முதல் படத்தில் சம்பளம் வெறும் 10 ரூபாய்.. இன்று ரூ.65 கோடி மதிப்பு சொத்து.. யார் இந்த நடிகை..!

அதன் பிறகு அவர் படித்து பட்டம் பெற்று ஆளுநர் மாளிகையில் 100 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் பிறந்ததால் 100 ரூபாயை வைத்து குடும்பம் நடத்த சிரமமாக இருந்தது. இதையடுத்து பாடல் ஆசிரியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்ததை அடுத்து சினிமாவில் வாய்ப்பு கேட்டார்.

avm rajan3

ஏவிஎம் ராஜனுக்கு முதன் முதலாக ‘சிவகங்கை சீமை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க 250 ரூபாய் சம்பளம் கிடைத்தது. ஆனால் அவரது துரதிஷ்டம் அந்த படத்தில் அவரது காட்சிகள் நீக்கப்பட்டன.

இதனை அடுத்து அவர் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ‘நானும் ஒரு பெண்’ என்ற திரைப்படத்தில் எஸ்எஸ்ஆரின் சகோதரராக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த புஷ்பலதா தான் பின்னாளில் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பெற்ற வெற்றி காரணமாக ஏவிஎம் ராஜனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக ஏவிஎம் நிறுவனம் அவரை வைத்து பல திரைப்படங்கள் தயாரித்ததால் தன்னை வாழ வைத்த நிறுவனத்தின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் அவர் வைத்துக் கொண்டார்.

avm rajan2

பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, எங்க வீட்டுப் பெண், நம்ம வீட்டு லட்சுமி, பந்தயம், கற்பூரம் உள்பட பல திரைப்படங்களில் அவர் நாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்த நிலையில் தன்னுடன் கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்த புஷ்பலதாவை காதலித்தார். அதன் பிறகு அவர் முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சமாதானப்படுத்தி புஷ்பலதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

10ஆம் வகுப்பு படிக்கும்போதே எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை லதாவின் மறுபக்கங்கள்..!

இந்த நிலையில் சொந்த படம் எடுக்கலாம் என்று முடிவு செய்த ஏவிஎம் ராஜன் – புஷ்பலதா தம்பதியினர் சிவாஜி கணேசன் நடித்த ‘ஊரும் உறவும்’, ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’ ஆகிய  இரண்டு படங்களை தயாரித்தனர். ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து சொத்தை விற்று கடன் வாங்கி கார்த்திக் நடித்த ‘நன்றி’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். அதன் பிறகு அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மத போதகரானதாக கூறப்படுகிறது.

avm rajan

அவர் மட்டும் இன்றி அவருடைய மகளும் நடிகையுமான ஸ்ரீ என்பவர் மத போதகராக மாறி இப்போது வரை கிறிஸ்தவ மதத்திற்கு சேவை செய்து வருகிறார்.

எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!

ஆனால் அதே நேரத்தில் முதல் மனைவியின் மூன்று குழந்தைகள் நன்றாக படித்து தற்போது வெளிநாட்டில் நல்ல வேலையில் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews