எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் என்ற கேரக்டராகவே நடித்த படம்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. இந்த படம் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி வசூலையும் அள்ளிக் கொடுத்தது.

இந்த படம் உருவான கதை ஒரு சுவாரசியமானது. பிரபல பத்திரிகையாளர்கள் அழகன் தமிழ்மணி மற்றும் எழுத்தாளர் தூயவன் ஆகிய இருவரும் டெல்லியில் ஒரு சினிமா விழாவுக்காக சென்றிருந்தார்கள். அப்போது அங்கு ‘டச் ஆஃப் லவ்’ என்ற திரைப்படத்தை பார்த்தபோதுதான் இந்த படத்தை அப்படியே தமிழில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர்.

இளையராஜா பின்னணி இசை செய்ய மறுத்த ரஜினி படம்.. ஏவிஎம் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

ஒரு மாதம் இருவரும் உட்கார்ந்து கதை, திரைக்கதையை எழுதி முடித்த பின்னர், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் எம்ஜிஆர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சராக இருந்ததால் அவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டு அவரிடம் படத்தின் கதையை கூறினர். எம்ஜிஆருக்கும் கதை ரொம்ப பிடித்து விட்டது என்பதால், சிறப்பு அனுமதி பெற்று  சிறப்பு தோற்றத்தில் நடித்து தருகிறேன் என்று கூறியிருந்தார். இந்த படத்திற்கு ‘அன்புள்ள எம்ஜிஆர்’ என்ற டைட்டிலும் முடிவு செய்யப்பட்டது.

anbulla rajinikanth

மேலும் அம்பிகா நடித்த வேடத்தில் முதலில் ஜெயலலிதா நடிப்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டதிருந்தது. அப்போதுதான் முன்னணி அமைச்சராக இருந்த ஒருவர் இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூற அதன் பிறகு அழகன் தமிழ்மணி மற்றும் தூயவன் ஆகிய இருவரும் தாங்களே இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தான் எம்ஜிஆருக்கு பதில் ரஜினியை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ரஜினிக்கு நெருக்கமான நண்பரான கே.நட்ராஜ் அவர்களிடம் சென்று இந்த கதையை ரஜினியிடம் கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைக்க வேண்டும், அவ்வாறு ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் நீங்களே இந்த படத்தை இயக்கலாம் என்று கூறினர்.

இதனை அடுத்து ரஜினிகாந்தை சந்தித்த கே.நட்ராஜ் கதையை கூறி அவரிடம் நடிக்க சம்மதம் பெற்றார். ஆறு நாட்கள் மட்டும் ரஜினியிடம் கால்ஷீட் பெறப்பட்டாலும், அதன்பின் மேலும் சில நாட்கள் அவர் நடித்து கொடுத்ததாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. வெறும் 2500 ரூபாய் ஆரம்ப முதலீடாக வைத்து இந்த படம் தொடங்கப்பட்ட பிறகு பைனான்ஸ் மூலம் படம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. இந்த படத்திற்கு ரஜினிகாந்த் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினியை சந்திக்க மீனா அவரது வீட்டிற்கே வருவார். அப்போது அந்த காட்சியை தனது வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் அனுமதி கொடுத்தார். அதேபோல் இந்த படத்தில் ‘கடவுள் உள்ளமே’ என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடி கொடுத்தார்.

anbulla rajinikanth2

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அம்பிகா நடித்திருந்தார். அது மட்டுமின்றி ராஜ்குமார் சேதுபதி, சுலக்சனா, மணிமாலா, ஒய்.ஜி.மகேந்திரன், செந்தாமரை, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி ஜெய்சங்கர், பாக்யராஜ், ராதிகா, எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன் ஆகியவர்களும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக பாக்யராஜ் அந்த நேரத்தில் பிஸியாக இருந்தாலும் ரஜினி கேட்டுக் கொண்டதற்காக நடித்து கொடுத்தார். இவர்கள் இருவரும் நடித்திருக்கும் நாடக காட்சி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்.

படம் முடிந்து தியேட்டரில் வெளியானபோது இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ரஜினியின் காட்சிகள் மிகவும் இயல்பாக இருந்ததாகவும் பலர் விமர்சனம் செய்தனர். படம் பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

மொத்தத்தில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படம் ரஜினிக்கு மட்டுமின்றி மீனாவுக்கும் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது. இதனையடுத்து மீனா பின்னாளில் ‘எஜமான்’, ‘வீரா’ ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பது தெரிந்ததே.

மேலும் உங்களுக்காக...