1600 கோடி சொத்து.. விஜய்யின் தீவிர ரசிகர்.. மனைவிக்கு பயப்படுபவர்.. மகேஷ்பாபு சூப்பர் ஸ்டாராக என்ன காரணம்?

Published:

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக முடிசூடா மன்னனாக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு 1600 கோடி சொத்து இருப்பதாகவும், அவர் நம்மூர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவர் தனது குடும்பத்திற்காக எந்த தியாகமும் செய்வார் என்றும் குறிப்பாக மனைவிக்கு பயப்படுவார் என்றும் அதனால் தான் அவர் குடும்பம் இன்றும் அன்பான குடும்பமாக இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகினர் கூறி வருகின்றனர். அத்தகைய மகேஷ் பாபு பற்றி தற்போது பார்ப்போம்.

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவர் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி படிப்பு வரை அவர் சென்னையில்தான் இருந்தார். அதனால்தான் அவர் தெலுங்கு வாடை இல்லாமல் நல்ல தமிழ் பேசுவார்.

mahesh babu3

சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். அவருடைய தந்தை கிருஷ்ணாவின் வீடு நடிகை மனோரமா வீட்டின் எதிரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுவயதிலேயே மகேஷ்பாபுவை தனது அண்ணன் மகன் என மனோரமா பெருமையாக பேசுவார். மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா நடித்த பல படங்களில் மனோரமா நடித்துள்ளார்.

mahesh babu4

அதேபோல் மகேஷ்பாபு விஜய்யின் தீவிர ரசிகர், விஜய்யும் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகர். மகேஷ் பாபுவின் பல படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார். அதேபோல் விஜய்யின் சில படங்களின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகை பொறுத்தவரை ஹீரோக்கள் ஆர்ப்பாட்டமாகவும் ஆவேசமாகவும் வசனம் பேசுவார்கள். ஆனால் முதல் முறையாக அமைதியாக அழுத்தமாக வசனம் பேசும் கேரக்டரை தேர்வு செய்தது மகேஷ் பாபுதான். தனக்கென தனி முத்திரை, ஸ்டைல் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்து அதற்கு தகுந்தபடி கேரக்டரை தேர்வு செய்வார்.

mahesh babu1

மகேஷ்பாபுவுக்கு முகத்தில் உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது என்ற விமர்சனம் இருப்பது உண்டு. ஆனால் அந்த விமர்சனத்தை அவர் கண்டுகொள்ளாமல் தனக்கு என்ன வருமோ அதற்கேற்றவாறு கதை தயார் செய்யுங்கள், மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் எல்லாம் வேண்டாம் என்று இயக்குனரிடம் அவரே சொல்வாராம்.

ஆனால் அதே நேரத்தில் முதல் முதலாக ஸ்டைலான ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் இருந்து வருகிறார் மகேஷ் பாபு. அதுதான் அவரது மிகப்பெரிய பலமாக இருந்தது என்றும் கூறப்படுவதுண்டு.

திரையுலகை பொருத்தவரை சினிமாவில் புகழ் பெற்று விட்டால் அடுத்தது அரசியல்தான் என்ற நிலை உள்ளது. தெலுங்கு திரையுலகினர் பலர் அரசியலில் இருந்தாலும் மகேஷ் பாபு மட்டுமே அரசியல் பக்கமே சென்றதில்லை. அதற்கு காரணம் அவருடைய தந்தை கிருஷ்ணாதான். எந்த காரணத்தை முன்னிட்டும் அரசியலுக்கு செல்லக்கூடாது என்று அவர் அறிவுறுத்திருந்தார்.

அரசியலுக்கு வந்து மண்ணை கவ்விய நடிகர்கள்.. விஜய்க்கு வெற்றி கிடைக்குமா?

அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்காதவர். பேசிய சம்பளம் வேண்டும் என்று மகேஷ்பாபு கறாராக இருக்க மாட்டார் என்றும் தயாரிப்பாளர் கஷ்டப்படுவது போல் தெரிந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுவதுண்டு.

mahesh babu2

அதுமட்டுமின்றி பட ரிலீஸின்போது தயாரிப்பாளருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அவரே முன்வந்து அந்த சிக்கலை தீர்க்க உதவி செய்வார்.  இந்த விஷயத்தில் அவர் நம்மூர் அஜித் மாதிரி இருந்தார் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பாபு மும்பையைச் சேர்ந்த நம்ரதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் ஒரு படப்பிடிப்புக்கு சென்ற போதுதான் அவருக்கு நம்ரதா அறிமுகமானார். அதன் பிறகு அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு கௌதம், சித்தாரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகேஷ் பாபு நடித்த ‘போக்கிரி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்த படத்தை விஜய் தமிழில் ரீமேக் செய்தார். அந்த படம் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் அதே டைட்டிலில் உருவானது. அதேபோல் விஜய்யின் ‘கில்லி’ படமும் மகேஷ் பாபுவின் சூப்பர்ஹிட் படமான ‘ஒக்கடு’ என்ற படத்தின் ரீமேக்காகும்.

mahesh babu1

இந்த நிலையில்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தை பார்த்த உடனே தெலுங்கு ரீமேக் உரிமையை மகேஷ் பாபு வாங்கினார். ஆனால் விநியோகஸ்தர்கள் மகேஷ் பாபுவிடம் சென்று துப்பாக்கி திரைப்படத்தை நாங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிட விரும்புகிறோம், கண்டிப்பாக இங்கு 50 நாட்களுக்கு மேல் ஓடும், நீங்கள் அந்த ரீமேக் உரிமையை எங்களுக்காக விட்டு தர வேண்டும் என்று சொல்ல அவர் வினியோகிஸ்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு துப்பாக்கி படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மிகுந்த மதிப்பும் மரியாதை வைத்திருப்பவர் மகேஷ் பாபு. அதனால்தான் அவரது இயக்கத்தில் ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் மகேஷ்பாபுவின் திரை உலக வாழ்க்கையில் மிக மோசமான படமாக அமைந்தது துரதிர்ஷ்டமானது.

மகேஷ்பாபுவின் அப்பா கிருஷ்ணா அந்த காலத்தில் பிரபல நடிகராக இருந்தார். நம்மூர் சிவாஜி கணேசனுக்கு இணையாக அவர் தெலுங்கில் பிரபல நடிகராக இருந்த நிலையில் மகேஷ்பாபு பிறக்கும்போதே பணக்காரராகதான் பிறந்தார். அது மட்டுமின்றி மகேஷ்பாபு பல தொழில்கள் செய்வதாகவும் சென்னையில் மட்டுமே அவருக்கு பல தொழில்கள் இருப்பதாகவும் அதை அவரது நண்பர்கள் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்றைய நிலையில் மகேஷ் பாபுவுக்கு ரூ.1600 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஹாலிவுட் லெவலில் உலகம் முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக உள்ளது. அமேசான் காடுகளில் தான் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

மொத்தத்தில் இதுவரை தெலுங்கு நடிகராக மட்டுமே இருந்த மகேஷ் பாபு அடுத்ததாக ஹாலிவுட் லெவலில் உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வெளியானால் அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...