இப்போது உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ… அப்போது பாழடைந்த பங்களா.. கமல் பட கிளைமாக்ஸ் இங்கே தான்..!!

சென்னையில் தற்போது எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற மால் இருக்கிறது என்பதும் பிரம்மாண்டமாக உள்ள இந்த மாலில் தினமும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர் வருகிறார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த 1980 களில் இந்த மால் இருந்த இடம் பாழடைந்த பங்களாக்கள் இருந்த இடமாக இருந்தது. பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கே தான் நடந்தது.

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான உயர்ந்த உள்ளம் என்ற திரைப்படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு இங்கே தான் நடந்தது. இங்கே தான் அதிரடியான ஆட்டோ சண்டை காட்சி படமாக்கப்பட்டது. கமல்ஹாசன், அம்பிகா, ராதா ரவி, வி கே ராமசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் உயர்ந்த உள்ளம். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் 1985 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வெளியானது.

uyarndha ullam1

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோ.. சூப்பர்ஹிட்டான ஆச்சரியம்..!

இந்த படத்தில் கமல் ஒரு பணக்கார இளைஞராக வருவார். ஆனால் அவர் குடிப்பது, சீட்டு ஆடுவது, நண்பர்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் உதவி செய்வது என்ற கேரக்டரில் இருப்பார். அவரது இரக்க குணத்தையும் ஏமாளித்தனத்தையும் அறிந்து கொண்ட ராதாரவி அவரிடம் வேலைக்கு சேர்வது போல் நடிப்பார். தன்னுடைய காதலிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கமலிடமிருந்து ஏராளமாக பணத்தை வாங்குவார்.

இந்த நிலையில் சீட்டாடி, குடித்து ஒரு கட்டத்தில் அனைத்து பணத்தையும் கமல் இழந்து விடுவார். அவருடைய அவுட் ஹவுஸில் தான் விகே ராமசாமி மற்றும் அவருடைய மகள் அம்பிகா இருப்பார்கள். விகே ராமசாமி மகள் அம்பிகா மீது கமலுக்கு காதல் வரும்.

இந்த நிலையில் பணம் அனைத்தையும் இழந்த நிலையில் கமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும். அவர் வேறு வழி இன்றி விகே ராமசாமி குடிசையில் தாங்குவார். அம்பிகா அவருக்கு உதவி செய்து ஒரு ஆட்டோ வாங்கி கொடுப்பார். அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்து கொண்டு இருப்பார்கள்.

uyarndha ullam

இந்த நிலையில் தான் ராதாரவி காதலித்த பெண்ணை அவர் கைவிடும்படி நிலை வர கமல் அவருக்கு அறிவுரை கூறிய சேர்த்து வைப்பார். இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஒரு ஆட்டோ சண்டைக்காட்சி பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்க பல இடங்களை படக்குழுவினர் பரிசீலனை செய்த நிலையில் தான் இப்போது எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ள பழைய பங்களாக்கள் இருந்த இடம் ஞாபகம் வந்தது.

எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!

உடனே இந்த படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் அந்த இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டண்ட் காட்சியை படமாக்க முடிவு செய்தார். இந்த ஸ்டண்ட் காட்சியை பப்பு வர்மா வித்தியாசமான முறையில் எடுத்துக் கொடுத்தார். ஆட்டோ சேஸிங் படம் பார்ப்பவர்களை அசர வைத்தது.

ஒரு காட்சியில் ஆட்டோ ஜம்ப் எடுக்க வேண்டிய நிலை வந்த போது கமலுக்கு டூப்பாக ஸ்டண்ட் இயக்குனர் பப்பு வர்மாவே நடித்தார். இந்த காட்சியில் நடிப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ், டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோர்களை அருகில் வைத்துக் கொண்டு படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த ஆட்டோ ஜம்ப் காட்சி இப்போது பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும்.

uyarndha ullam4 scaled

இந்த படம் கமல்ஹாசனின் நடிப்பை வெளிப்படுத்திய மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று கூறலாம். அனைத்து பணத்தையும் இழந்து ஏழையான பின் சிரித்துக்கொண்டே அழுவது, அழுது கொண்டே சிரிப்பது போன்ற அற்புதமான நடிப்பை கமல்ஹாசன் வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இரண்டாம் பாதியில் கமல்ஹாசன் முழுக்க முழுக்க சோகமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்தினர். மேலும் அம்பிகாவையும் சிறந்த முறையில் பயன்படுத்தவில்லை என்றும் காமெடியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று கூறப்பட்டது. கமல் மற்றும் ராதாரவி நடிப்பு மட்டுமே பிளஸ் ஆக இருந்தது.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்திற்கு நஷ்டம் இல்லை என்று கூறப்பட்டது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். எங்கே என் ஜீவன் என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் காதில் ஒலிக்கும். அதேபோல் பல வானொலியில் காலை தென்றல் என்ற பாடல் அதிகாலையில் ஒலிக்கும்.

அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!

வந்தாள் மகாலட்சுமியே என்ற பாடலில் கமல் வித்தியாசமான முறையில் நடனமாடி அசத்தி இருப்பார். மொத்தத்தில் இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கமல்ஹாசனின் நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews