சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கிழக்கு வாசல் சீரியல் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து சீரியல்களும் மக்களின் மனதை கவர்ந்து வரும் நிலையில் தற்போது கிழக்கு வாசல் சீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவில்லாமல் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.
ஆனால் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 என்ற புது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் தொடக்கத்தின் காரணமாக தற்பொழுது விஜய் டிவி தனது சீரியல்களில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு வாசல் சீரியல் மாலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது மாலை நான்கு மணிக்கு மாற்றி ஒளிபரப்ப போவதாக சில தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாக வெளியாகியுள்ளது.
இது குறித்து பல குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த சர்ச்சை குறித்து அந்த சீரியலில் நடித்துவரும் நடிகர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை ரேஷ்மாவிடம் இது குறித்து கேட்கப்பட்டுள்ளது அதற்கு அவர், ஆயிரம் எபிசோடுக்கு மேல் வெற்றி நடை போட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலிருந்து நடிகர் வெங்கட் இந்த சீரியலுக்காக மட்டுமே வந்ததாகவும், தானும் ஒரு பெரிய சீரியலில் இருந்து விலகி தான் தற்பொழுது கிழக்கு வாசல் சீரியலில் நடித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் நடிகர் தினேஷ் அவர்களுக்கும் இந்த சீரியலின் மூலமாக நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், இந்த நேரத்தில் சீரியலின் பிரைம் நேரம் மாறி இருப்பது மன வருத்தத்தை அளிப்பதாகவும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகர் தினேஷ் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிவந்த நிலையில்தான் தினேஷ் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் இந்த கால மாற்றம் அவருக்கும் மிக மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் தந்தையான சந்திரசேகர் அவர்கள் முதல்முறையாக சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார். அவரும் இந்த காலதாமதம் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யாராவது வீட்டில் 4 மணிக்கு எல்லாம் சீரியல் பார்ப்பாங்களா.. என்னப்பா இதுலாம் நடக்குற காரியமா.. என தனது கருத்தை முன் வைத்துள்ளார். மேலும் இந்த திடீர் மாற்றத்தினால் தொடரில் சந்திரசேகர் அவர்கள் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
நீங்க பண்ணுறத பாக்கவே அருவருப்பாக இருக்கு.. பதிலடி கொடுத்த சாய் பல்லவி!
இந்த கால மாற்றத்தால் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதில் நடித்து வந்த முன்னணி நடிகை, நடிகர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நான்கு மணிக்கு ஒளிபரப்பினால் கிழக்கு வாசல் தொடர் வெற்றி பெறுமா, இல்லையா என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மிகவும் எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் காரணமாக காற்றுக்கென்ன வேலி சீரியல் விரைவில் முடிக்கப்பட்டது. இந்த அதிருப்தியில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் கிழக்கு வாசல் சீரியலிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த கால மாற்றத்தினால் சீரியலில் நடித்து வரும் முன்னணி நடிகர், நடிகைகள் சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதுபற்றிய உண்மையை அறிந்து கொள்ள சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.