Raghava Lawrence: திரையுலகில் நடனம், நடிப்பு, இயக்கம் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் குரூப் டான்சராக திரைப்படங்களில் அறிமுகமானவர் அதன் பிறகு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக மாறினார்.
தமிழில் 1993 ஆம் ஆண்டு வெளியான உழைப்பாளி படத்திலேயே இவர் குரூப் டான்சராக நடனமாடி இருப்பார். ஆனால் இவர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற மகா கணபதி பாடலில் தான்.
அஜித் அன்னிக்கு அப்படி சொன்னார்.. அதான் நான் இங்கே இருக்கேன்.. ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்..!!
அதன் பிறகு பல படங்களில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஆனால் இவரது இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான முனி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என அனைத்துமே ஹிட் படங்களாக தான் லாரன்ஸ்க்கு அமைந்தது.
அவர் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் அவரது நடனத்திற்கும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் தனது ரசிகர்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது கூறிய அவர் ரசிகர்கள் சில சமயங்களில் புரிதல் இல்லாமல் நடந்து கொள்ளும் போது வருத்தமாக இருக்கும்.
லாரன்ஸ் பெயரை ராகவா லாரன்ஸா மாத்துனது இந்த பிரபலத்தோட அப்பாவா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..
என்னை பார்க்க வந்த ரசிகன் விபத்தில் உயிரிழந்துள்ளான். இதனால் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு யாரும் வர வேண்டாம் என்று கூறியிருந்தேன். அதற்கு ரசிகர்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள் எங்களை வர வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களா?
எங்களை வேண்டாம் என்று சொல்லிட்டீங்களா என்று கேட்டு அனுப்புவார்கள். தன்னைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு செலவு இருக்கும். கடன் வாங்க வேண்டும், வண்டி பிடிக்க வேண்டும், தங்குவதற்கு இடம் பார்க்க வேண்டும்.
ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவி
இப்படி இத்தனை செலவுகள் செய்ய வேண்டும். அதனால் லாரன்ஸ் அவர்களே ரசிகர்களை சென்று சந்திக்க தயார் என்று கூறுகிறார். இதனை புரிந்து கொள்ளாமல் சில ரசிகர்கள் பேசும் போது தனக்கு வருத்தமாக இருக்கும் என்று பகிர்ந்துள்ளார்.