அஜித் அன்னிக்கு அப்படி சொன்னார்.. அதான் நான் இங்கே இருக்கேன்.. ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்..!!

Raghava Lawrence: அல்டிமேட் ஸ்டாரானா அஜித்குமார் நடிப்பில் 1999 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் அமர்க்களம். இந்த படத்தில் ரகுவரன், வினு சக்கரவர்த்தி, ஷாலினி, நாசர், ராதிகா, அம்பிகா, ரமேஷ் கண்ணா, சார்லி, வையாபுரி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஒரு படத்திற்காக கெஞ்சிய அஜித்.. இப்போ ரசிகர்களின் அல்டிமேட் ஸ்டார்.. திறமையால் உயர்ந்த AK..!!

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அஜித்துக்கு முக்கிய படமாக அமைந்தது. அஜித்துக்கு மட்டுமல்லாமல் இந்த படம் ராகவா லாரன்ஸ்க்கும் மிக முக்கியமான படம் என்று கூறலாம். இதனை பேட்டி ஒன்றில் லாரன்ஸ் பகிர்ந்து உள்ளார்.
சரண் இயக்கிய இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் தியேட்டர் முன்பு படமாக்கப்பட்ட மகா கணபதி பாடலில் தான் ராகவா லாரன்ஸ் நடனம் ஆடி இருப்பார். இது ராகவா லாரன்ஸ் நடனமாடிய மூன்றாவது தமிழ் படம். அதுதான் அவர் வளர்ந்து வந்த காலகட்டம்.

அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் மகா கணபதி பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து ராகவா லாரன்ஸ் பகிர்ந்துள்ளார். அப்போது அவரிடம் அஜித்துடனான நட்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லாரன்ஸ் எங்களுக்குள் அதிக நட்பு எல்லாம் கிடையாது.

அமர்க்களம் படம் பற்றி சொல்ல வேண்டும் என்று கூறிய அவர் இயக்குனர் சரண் நான் மக கணபதி பாடலுக்கு நடனமாடுவேன் என்று கூறியபோது அஜித் நினைத்திருந்தால் அவரும் என்னுடன் வந்து ஆடி இருக்கலாம். அவருடைய படம் அவர் கதாநாயகன் என்பதால்.

ரிலீசுக்கு முன்பே 250 கோடி பிசினஸ் செய்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!

ஆனால் அஜித் அந்த தம்பியே ஆடட்டும் நல்ல ஆடுகிறார் என்று கூறிவிட்டார். அந்த மகா கணபதி பாட்டிற்கு நடனம் ஆடவில்லை என்றால் நான் திரையில் தோன்றியிருக்க முடியாது இப்படி இந்த இடத்தில் இருந்திருக்கவும் முடியாது என கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.