ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவி

சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் வீடுகள், பங்களாக்கள், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்று முதலீடு செய்து வரும் ஸ்டார்களுக்கு மத்தியில் ராகவா லாரன்ஸ் சற்று வித்தியாசமானவர். அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் போன்றோர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்து வருகிறார்.

தனது படங்களிலும் உதவிகள் செய்வது போன்ற காட்சிகளை வைத்திருப்பார். இந்நிலையில் தீபாவளி விருந்தாக வெளியான ஜிகர்தண்டா xx திரைப்படம் ராகவா லாரன்ஸ்-க்கு பெரிய வரவேற்பைக் கொடுத்துள்ளது. இதுவரை இல்லாத மாறுபட்ட ரோலில் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் ஜிகர்தண்டா xx படத்தைப் பார்த்து சமூக வலைதளங்களில் படம் குறித்த நல்ல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகவா லாரன்ஸிடம் கேள்வி ஒன்று வைக்கப்பட்டது. மனைவியிடம் சமீபத்தில் வாங்கிய திட்டு என்னவென்று கேட்க அதற்கு அவர் விடையளித்துள்ளார். அதாவது கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1கோடி நிதியுதவி அளித்ததாகவும் இதை மனைவியிடம் சொல்லும் போது நிதி கொடுக்கலாம் ஆனால் இவ்வளவு பணமா என்று கேட்ட பொழுது நான் அங்குள்ள நிலவரங்களை எடுத்துக் கூறி நிறையபேர் வீடுகளை இழந்து தவித்து, இயற்கையின் தேசமான கேரளாவே நிலை குலைந்து போயிருப்பதையும் கூறிய பொழுது அதை உணர்ந்து கொண்டார் என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்பு சொன்ன ஒரே ஐடியா : தடாலென 30 கிலோ குறைந்த நடிகர் பாலா-இதான் அந்த சீக்ரெட்

மேலும் நம்மிடம் அந்தப் பணம் இருந்தால் இன்னும் ஓர் வீடு வாங்கலாம், கார் வாங்கலாம், நகை வாங்கலாம் அவையெல்லாம் பேப்பராகவும், பொருளாகவும் இருக்கும் ஆனால் இன்னொருவருக்கு அது உதவும் போது அது உணர்வாக இருக்கும் எனவும் தன் மனைவியிடம் அவர் கூறியுள்ளார்.

1 கோடி நிதியை தனது அம்மாவும் நானும் சேர்ந்து கேரள முதல்வரிடம் கொடுத்து வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க உதவிடுமாறும் கேட்டுக் கொண்டதாக அந்தப் பேட்டியில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.