லாரன்ஸ் பெயரை ராகவா லாரன்ஸா மாத்துனது இந்த பிரபலத்தோட அப்பாவா.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..

தமிழ் சினிமாவின் சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டும் விளங்கி வருகிறார். தெலுங்கில் நாகர்ஜுனா நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ், நாகார்ஜுனாவின் அடுத்த இரண்டு தெலுங்கு படங்களையும் இயக்கி இருந்தார்.

இதன் பின்னர் தமிழில் அவர் இயக்கிய ‘முனி’ என்ற திரைப்படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. பேய் படங்களை காமெடி மற்றும் எமோஷனல் கலந்து முனி படத்தில் ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்திய விதம் அந்த சமயத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதன் அடுத்தடுத்த பாகங்களாக காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பேய் படங்களின் வெற்றி இயக்குனர் என்ற பெயரையும் லாரன்ஸ் பெற்றிருந்தார்.

மேலும் காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமாரை வைத்து ‘லட்சுமி’ என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி இருந்தார். இது தவிர முனி படத்தில் அனைத்து பாகங்களிலும் ஹீரோவாக நடித்துள்ள லாரன்ஸ், மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதிலும் அவர் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம், லாரன்ஸை ஒரு முன்னணி கதாநாயகனாக உயர்த்தியதுடன் பல தரப்பிலான மக்களிடம் இருந்து பாராட்டுக்களையும் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இதுவரை தான் நடித்திராத ஒரு பரிமாணத்தில் ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்திருந்தது நிச்சயம் தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாகவும் மாறி இருந்தது. இந்த நிலையில் லாரன்ஸாக இருந்தவரை ராகவா லாரன்ஸ் என பெயர் மாற்றியது யார் என்பது பற்றிய சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.
Jayam Ravi Family

நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா ஆகியோரின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன் இது தொடர்பாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் பேசும் போது, “நான் தயாரித்த ஹிட்லர் என்ற தெலுங்கு படத்தில் ராகவா லாரன்ஸின் நடன அசைவை பார்த்த போது பாடல் பெரிய ஹிட் பெரிய அளவில் சென்றடையும் என அப்போதே தோன்றி விட்டது. இதனை பார்த்ததும் கையில் இருந்த காசை லாரன்ஸிடம் கொடுத்தேன்.

அதே போல, லாரன்ஸ் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது. மேலும் அவர் தீவிர ராகவேந்திராவின் ரசிகர். இதனால், லாரன்ஸை அழைத்து ராகவா என்ற பெயரை சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன். அவருக்கும் அந்த பெயர் பிடித்து போக, எனது படத்திலும் ராகவா லாரன்ஸ் என நான் பெயர் வைத்தேன். அவருக்கு அந்த பெயரை வைத்தது நான் தான். அதை திரைப்படத்தில் முதன்முதலில் பயன்படுத்தியதும் நான் தான்” என எடிட்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews