அந்தேரி மேற்கு, லோக்கண்ட்வாலா வளாகத்தில் உள்ள ஓபெராய் ஸ்கை கார்டன்ஸ் என்ற இடத்தில் மூன்று அபார்ட்மெண்ட்கள் 18வது மாடியில், ஒரு அபார்ட்மெண்ட் 19வது மாடியில் உள்ள 4 வீடுகள் பிரியங்காவுக்கு சொந்தமானதூ. 18வது மாடியில் உள்ள 1,075 சதுர அடி வீட்டை ரூ.3.45 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அதேபோல் 18வது மாடியில் உள்ள 885 சதுர அடி வீட்டை ரூ.2.85 கோடி. இந்த இரண்டு வீடுகளும் கார் பார்க்கிங் வசதியுடன் உள்ளது.
அதேபோல் 19வது மாடியில் உள்ள 1,100 சதுர அடி வீட்டை ரூ.3.52 கோடிக்கும் அதே அபார்ட்மெண்டில் உள்ள இன்னொரு 1,985 சதுர அடி வீட்டை ரூ.6.35 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை தொடர்பான ஆவணங்கள் மார்ச் 3ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகை பிரியங்கா காந்தியின் குடும்பம் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் நிலையில் அவ்வப்போது வீடு வாங்கும், சில ஆண்டுகள் கழித்து விற்பதும் வழக்கமான ஒன்று என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். தற்போது, அவர் தனது கணவர் நிக் ஜோனாஸுடன், மகள் மால்தி மேரி சோப்ரா ஜோனாஸுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,